முகப்பு /செய்தி /வணிகம் / விமானத்தில் எளிமை.. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியை அடையாளம் தெரியாத விமான பணிப்பெண்.. வைரல் ஸ்டோரி!

விமானத்தில் எளிமை.. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியை அடையாளம் தெரியாத விமான பணிப்பெண்.. வைரல் ஸ்டோரி!

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

அவர்களது மகள் அக்ஷதா மூர்த்தி பிரிட்டன் பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை மணந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் நாட்டின் பணக்காரர்களில் முக்கியமானவர்கள்.  ஆனால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் எளிமையானது. இவர் தொழிலதிபர் என்பதையும் தாண்டி பிரிட்டன் பிரதமரின் மாமனாரும் கூட.  இவர் எளிமையாக இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் மக்கள் இவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு போகிறது. தி கபில் சர்மா ஷோவில் இது தொடர்பான ஒரு கதையை சுதா மூர்த்தி பகிர்ந்துக் கொண்டார். விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணால் நாராயண மூர்த்தியை அடையாளம் காண முடியாமல் போனதாம். அந்த கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் உடனான தனது சந்திப்பை நினைவுகூரும் வகையில் ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார். 2000-களின் முற்பகுதியில் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தில் நாராயண மூர்த்தியின் அருகில் அமர்ந்திருந்ததாக Saleswah CRM-ன் CEO அனிந்த்யா சாட்டர்ஜி கூறினார். இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான நாராயணன் எளிமையாக இருந்ததால், விமானப் பணிப்பெண்ணால் அவரை அடையாளம் காண முடியவில்லையாம்.

அனிந்தியா சாட்டர்ஜி ட்விட்டரில், “நானும் நாராயண மூர்த்தியும் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங்கிற்கு ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் வணிக வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தேன், நாராயண மூர்த்தி என் அருகில் இருந்தார். ஆச்சரியம் என்னவென்றால், விமானப் பணிப்பெண்னால் இந்தியாவின் மூத்த தொழிலதிபரை அடையாளம் காண முடியவில்லை. நாராயண மூர்த்தியின் ஜாக்கெட்டை கழற்றுமாறு அவர் கேட்டது மிகவும் அதிர்ச்சியளித்தது” என்று தெரிவித்திருந்தார்.

சாட்டர்ஜியின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு ட்விட்டர் பயனரும் நாராயண மூர்த்தியை சந்தித்த கதையைப் பகிர்ந்துள்ளார். 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில், இன்ஃபோசிஸின் பில்லியனர்கள் புனே-பெங்களூரு வழித்தடத்தில் எகானமி வகுப்பில் பயணிப்பார்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக தி கபில் ஷர்மா ஷோவில், நாராயண் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் அவரது அடையாளம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொன்னார். அவர்களது மகள் அக்ஷதா மூர்த்தி பிரிட்டன் பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை மணந்துள்ளார்.

சுதா மூர்த்தி தனது மகள் மற்றும் மருமகனைச் சந்திக்க பிரிட்டனுக்குச் சென்றபோது, ​​லண்டனில் உள்ள அவரது முகவரி, 10 டவுனிங் ஸ்ட்ரீட் என்பதை விமான நிலைய அதிகாரிகள் நம்பத் தயாராக இல்லையாம். உண்மையில் இது பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம். சுதா மூர்த்தி தனது விசா படிவத்தில் இந்த முகவரியை குறிப்பிட்டுள்ளார், இதை அதிகாரிகளால் நம்ப முடியவில்லையாம்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Infosys