விழுப்புரம் சந்தைகளில் பந்தலில் விளையும் காய்கறிகளுக்கு நல்ல மவுசு கூடி உள்ளது. விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் விவசாயிகள் பந்தல் காய்கறிகளான புடலை பாகற்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் போன்ற சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் எடுத்து பாணம் பட்டு பகுதியை சேர்ந்த சிவா என்ற விவசாய தன்னோட 35 சென்டு நிலத்தில் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாகற்காய்களை முக்கோண பந்தல், தட்டாரப் பந்தல்,போன்று மூன்று வகைகளில் பயிரிட்டு வருகிறார்.
பாகற்காய் விதைகளை பாலூர் விதை பண்ணையில் வாங்கி, அதனை பயிரிட்டு இரண்டு மாத அறுவடை முடிந்து மூன்றாவது மாதம் அறுவடையை விவசாயி சிவா தொடங்கியுள்ளார். பயிர் செய்த இரண்டு மாதத்தில் பாகற்காயில் மட்டும் 65 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்த்து உள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விவசாயி சிவா மேலும் கூறுகையில், “பாகற்காய் தற்போது நல்ல விளைச்சல் தந்து நல்ல லாபத்தையும் தந்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 கிலோ வரை அறுவடை செய்கிறோம் அறுவடை செய்யப்படும் காய்கறிகளை நேரடியாக உள்ளூர்களில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் சந்தைகளிலும் விற்பனை செய்து வருகிறோம். சந்தைகளில் காய்கறிகளை 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கின்றனர். பாகற்காய் மூன்று மாத பயிராகும். 2 மாதத்திலேயே குறுகிய இடத்தில் அதிக லாபத்தை தந்துள்ளது இந்த பாகற்காய் சாகுபடி. பல்வேறு பந்தல் வடிவமைப்புகளை கொண்டு பயிர் செய்து வருகிறேன், இதனால் வேலை ஆட்களின் செலவு மிச்சம் ஆகிறது. விவசாயிகள் நிச்சயமாக பந்தல் சாகுபடி முறையில் காய்கறிகளை பயிரிட்டு நல்ல மகசூல் பெற்று நல்ல வருமானத்தை பார்க்க முடியும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விவசாயி சிவா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Money18, Villupuram