முகப்பு /business /

விருதுநகர் விவசாயிகளே.. மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய வேண்டுமா?

விருதுநகர் விவசாயிகளே.. மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய வேண்டுமா?

 மரம் நடும் நிகழ்வு

மரம் நடும் நிகழ்வு

World Environment Day : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகரில் காவேரி கூக்குரல் அமைப்பு சார்பில் மரம்‌ நடும் நிகழ்வு நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவேரி கூக்குரல் அமைப்பு விருதுநகர் கிளை சார்பில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. 

காவேரி கூக்குரல் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவருகிறது. இந்த இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடும் மாபெரும் செயலை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக காவேரி கூக்குரல் அமைப்பினர் இந்த ஆண்டு 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டனர்.

அந்த வகையில் ஜூன் 5ம் தேதி காலை 9 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவேரி கூக்குரல் அமைப்பு விருதுநகர் கிளை சார்பில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நத்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு 500 மரக்கன்றுகளை நட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுபற்றி பேசிய காவேரி கூக்குரல் அமைப்பை சேர்ந்த ராஜாமணி, 'எங்கள் இயக்கம் மூலமாக விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு மிகக்குறைந்த விலையிலேயே வழங்கி வருகிறோம். மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய, மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Money18, Virudhunagar