முகப்பு /வணிகம் /

இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க..! 

இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க..! 

X
மாதிரி

மாதிரி படம்

Organic Farming : இயற்கை விவசாயத்திலிருந்து நாம் மாறியது ஏன் என்றும், என்ன நடக்கிறது இயற்கை விவசாயத்தில் எனவும் தஞ்சை விவசாயி விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Thanjavur, India

இயற்கை விவசாயத்தை நோக்கி பல விவசாயிகள் படையெடுக்க தொடங்கினாலும் இயற்கை விவசாயம் பற்றி பலருக்கு பல தேடுதல்கள் இருந்தாலும் இன்னும் இயற்கை விவசாயம் பற்றி பலர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்நிலையில், இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏன், என்றும் பசுமை புரட்சியால் வேளாண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தைப் பற்றிய புரிதல்களை தெரிந்து கொள்ள தஞ்சை மாரியம்மன் கோயில் அருகே சுமார் 25 ஏக்கரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இயற்கை விவசாயம் செய்து வரும் சித்தரிடம் கேட்டறிந்தோம். இதுகுறித்து அவர் நம்மிடம்பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ஏன் இவ்வளவு முக்கியம்

இயற்கை விவசாயத்தை பற்றிய தற்போது பலருக்கு தேடல்கள் அதிகமாகி வருகின்றன. இயற்கை விவசாயம் என்னவோ இன்று இருக்கும் உழவர்களும் இன்றியிருக்கும் அரசு மற்றும் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்தது என்று நினைக்க வேண்டாம். இது நம் முன்னோர்கள் தொன்று தொட்டு செய்து வந்த உணவு, உடை, இருப்பிடம் என நமக்கு ஒரு வேள்வியாக இருந்தது. அதனால் தான் வேளாண்மை என்பதை கலாச்சாரமாக எண்ணுகிறோம்.

அப்படி இருந்த ஒரு வேளாண்மை இன்று ஏன் இவ்வளவு நெருக்கடிக்குள் செல்கிறது என்று பார்த்தோம் என்றால்பொதுவாக பலவிதமான தாவரங்களும் பல விதமான விலங்கினங்களும் இருக்க கூடிய ஒரு நிலைக்குப் பெயர் தான் உயிர் பயிர் பன்மயம் என்று பெயர்.

உதாரணமாக ஒரு வெண்டைக்காயை எடுத்தோம் என்றால் அதில் 375-க்கு மேலான வகைகள் உள்ளது. ஒரு தக்காளிநூற்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருக்கிறது. புடலங்காயில் கத்தரிக்காய் இதுபோல பலவிதமான காய்கறிகளிலும், நெல் ரகங்களிலும், பல வகைகள் இருக்கிறது. இவ்வளவு வகைகள் இருந்தும் நாம் இதை சாப்பிடவில்லை என்பதை வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.

இயற்கை விவசாயி

தற்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் எவ்வளவோ என்னென்ன வகையான விதவிதமான உணவுகளை உண்கிறோம் நம் முன்னோர்கள் சாப்பிட்டதை விட இரண்டு மடங்கு அதிகமான உணவுகளை உண்கிறோம் இருந்தும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறதே ஏன்?. இதெல்லாம் இன்றைக்கு நெருக்கடி. இதனால் இயற்கை விவசாயம் அங்கக வழி வேளாண்மை என்று நாம் பலர் அதை நோக்கி செல்கிறோம்.சுமார் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவரின் வீட்டிலும் ஆடு, மாடு,கோழி இருந்தது.

இதையும் படிங்க : 6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

விவசாயத்தில் நெல் பயிரைத் தாண்டி வரப்புகளில் கீரை வகைகளும் உளுந்து வகைகளும் காய்கறி வகைகளும் தானிய வகைகளும் பயரிடப்பட்டது. மேலும் அப்போதெல்லாம் சிறுவயதில் நாம் நெல்லிக்கனிகளையும் அதிகம் உன்றிருப்போம். அப்போது ஒரு பொருளை மட்டும் நம்பியே உழவான்மை இல்லை. பல பயிர்களை சார்ந்தது 365 நாளும் ஒரு உழவன் வயக்காட்டில் இருந்து வீட்டிற்கு சென்றால் அவன் வீட்டிற்கு தேவையான காய்கறிகளோ பயிர் வகைகளோ, வயலில் இருந்து எடுத்து செல்வான்.

ஆனால் இன்று இருக்கும் நிலைமையில் ஒரு கருவேப்பிலை வாங்க வேண்டுமென்றால் கூட கடைகளில் தான் வாங்குகிறோம், அதேபோல ஒரு முட்டை வாங்குவதும். கோழிகளை முன்பெல்லாம் வீட்டில் இருந்து அவற்றை நஞ்சில்லா செலவில்லா உணவை, இருக்கும் இடத்திலேயே ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால் இப்போதெல்லாம் அவற்றை காண்பது அரிது. நெல்லிக்கனி விலை குறைவாக இருந்தாலும் அதை யாரும் வாங்கி உண்பதில்லை.

பசுமை புரட்சியால் ஏற்பட்ட மாற்றமா?

இவை ஏன் இப்போதெல்லாம் இல்லாமல் போனது என்ன காரணம் என்று பார்த்தோம் என்றால் பசுமை புரட்சியால் இரண்டு இடங்களை அது நமக்கு சங்கடப் படுத்தி உள்ளது. ஒன்று அனுபவத்தால் பெற்ற அறிவு அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது என்ன விதை போட வேண்டும் எப்போது என்ன பயிர் போட வேண்டும், அடி உரம் என்ன போடலாம் இதுபோன்ற பல கேள்விகள்.இது எல்லாம் உழவனுக்கு தெரிந்தது ஆனால் தற்போது வியர்த்தால் கூட எப்படி அதை துடைக்க வேண்டும் என்று மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலைஇந்த பசுமைப் புரட்சியால் உழவனை புற சார்பாக மாற்றி உள்ளது. எனவே பசுமைப் புரட்சி தொன்மையை, அறிவை அப்புறப்படுத்தியது.

இரண்டாவது, எவ்வளவு பயிர்கள் எத்தனை தாவரங்கள் அனைத்தையும் நம்மிடமிருந்து பிரித்துள்ளது குழந்தை ஈன்ற தாய்மார்களுக்கு பப்பாளி காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது ஆனால் பப்பாளி இலையில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரை நாம் சாப்பிடுகிறோம். இதுபோன்று நிறைய உதாரணங்களை இருக்கிறது. நிறைய தாவர வகைகளை அப்புறப்படுத்தி நான்கே நான்கு தாவரத்தை மட்டும் முன்னிறுத்தி வைத்தது பசுமை புரட்சி.

அது என்ன நான்கு தாவரம் என்றால் நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, பருத்தியில் குட்டைரகபருத்தையே நம்முடையது அதாவது காதி கிராஃப்ட் என்று சொல்வோம் அல்லவா கைகளால் சுத்தகூடியது மிக அருமையாக அதிலிருந்து பருத்தியை எடுக்கலாம். இந்த பருத்தியை அப்புறப்படுத்திவிட்டு பெரிய தொழிற்சாலைகள் நோக்கக்கூடிய பருத்தியை மாற்றிவிட்டது பசுமை புரட்சி. அடுத்தது கரும்பு நம்முடைய கரும்பு செங்கரும்பு தான் ஆனால் அவற்றை அழித்துவிட்டு ஆலை கரும்புகளை பயிரிடப்பட்டு சீனி தயாரிப்பதற்கும் சாராயம் காய்ச்சுவதற்கும் மாற்றி உள்ளது பசுமை புரட்சி‌. இதே போன்றுதான் கோதுமையும் அரிசியும்.‌

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த நான்கு தாவரத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற தாவரங்களை அப்புறப்படுத்தப்பட்டது பசுமை புரட்சி. எனவே மற்ற தாவரங்கள் அருகிப் போய்விட்டது இதனாலே ஊட்டச்சத்து குறைபாடு வந்துவிடுகிறது. எனவே பசுமைப் புரட்சி இவ்வளவு சங்கடங்களையும் நமக்கு ஏற்படுத்தியதை மறு யுக்தியை கையாள மற்றொரு புரட்சியாக மீண்டும் உருவெடுத்து வருகிறது இயற்கை விவசாயம். எனவே வெறும் அரிசி மட்டும் உணவாக இல்லாமல் பயிர் தானிய வகைகளையும் நெல்லிக்கனிகள் போன்ற பழ மர வகைகளும் காய் வகைகளும் பயிரிட்டு நம் சுற்றுச் சூழலிலே நமக்குத் தேவையான உணவை இயற்கை விவசாயம் மூலம் ஏற்படுத்திக் கொள்ள நாம் முன் வர வேண்டும்.

    First published:

    Tags: Agriculture, Local News, Thanjavur