முகப்பு /வணிகம் /

அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி அழுகி நாசம்.. நஷ்டத்தை சந்தித்த விரக்தியில் செங்கல்பட்டு விவசாயிகள்..

அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி அழுகி நாசம்.. நஷ்டத்தை சந்தித்த விரக்தியில் செங்கல்பட்டு விவசாயிகள்..

X
அறுவடைக்கு

அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி அழுகி நாசம்

Chengalpattu Farmers : செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே சுமார் 7 ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள், திடீரென கோடை மழை பெய்ததால் நீரில் அழுகி நாசம் ஆகிவிட்டது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தில் 7 ஏக்கர் நிலத்தை காஞ்சிபுரம் மாவட்டம் சாத்தனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து அதில் தர்பூசணி பயிரிட்டு வந்தனர்.

நல்ல விளைச்சல அடைந்து அறுவடைக்கு தயாராகி ஓரிரு நாளில் அதை அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக இருந்த சூழலில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் பயிரிட்ட 7 ஏக்கர் தர்பூசணி முழுவதும் அழுகி நாசமாகியது என பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி அழுகி நாசம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “8 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி 7 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட தர்பூசணி 2 நாட்கள் பெய்த மழையால் முழுவதும் அழுகி நாசமாகி விட்டது. முதலீடு செய்த 8 லட்சம் ரூபாயும் இழந்து தவிக்கிறோம். வட்டிக்கு கடன் வாங்கிய இடத்தில் வட்டி கட்டுவதா? அல்லது அசலை அடைப்பதா? என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்” என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் தங்களது இழப்பீட்டை ஈடுகட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Chengalpattu, Local News, Money18