விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர், நாட்டு ரக புடலங்காயில் நீண்டு வளரக்கூடிய புடலை ரகத்தை பயிர் செய்து மாதம் ரூ.35 ஆயிரம் வரை வருமானம் எடுத்து அசத்தி வருகிறார்.
அதிக சத்துகள் கிடைக்கின்றன :
காய்கறிகளில் சத்துகள் அதிகம் இருப்பதால் தினமும் 250 முதல் 300 கிராம் காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பந்தலில் வளர்க்கப்படும் பாகற்காய், பீர்க்கங்காய், புடங்காய் மற்றும்கோவைக்காய்க்கு அதிக பங்கு உண்டு. தற்போது புடலங்காய், பீர்க்கங்காய் பாகற்காய் சீசன் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் இந்த காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். புடலங்காய்,பீர்க்கங்காய் என அனைத்திலுமே ஹைபிரிட் ரகங்களே விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர்.
ஹைபிரிட் ரகங்களை விட நாட்டு ரக காய்கறிகளுக்கு சத்துக்கள் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து சில விவசாயிகள் மட்டுமே நாட்டு ரகங்களை பயிர் செய்து வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் 30 சென்ட் இடத்தில் நாட்டு புடலை ரகத்தில் நீளமாக வளரக்கூடிய புடலங்காயை சாகுபடி செய்துள்ளார்.
இவர் கடந்த ஒரு வருடமாக விவசாயம் செய்து வருகிறார். இதற்கு முன்னர் பெட்ரோல் பங்க் தொழில் ஈடுபட்டு வந்தவர், தற்போது விவசாயம் செய்து வருகிறார். 30 வருடங்களுக்குப் பிறகு பாணாம்பட்டு பகுதியில் நீண்டு வளரக்கூடிய நாட்டுப்புடலையை பயிர் செய்த விவசாயி இவர் தான். இந்த புடலங்காய் குறைந்தபட்சம் ஐந்தரை அடி வரை வளரக்கூடியது.
இதையும் படிங்க : ஓசூரில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.. ஆர்வமுடன் அள்ளி சென்ற மக்கள்!
எவ்வளவு செலவாகிறது :
இதுகுறித்து புடலை சாகுபடி செய்யும் விவசாயி சக்திவேல் கூறுகையில், “பூசணி குடும்பத்தைச் சேர்ந்தது புடலங்காய். இது வேகமாக வளரக்கூடியது, அதிக மகசூல் தரும் பயிராகும். நீளமாக வளரும் புடலை சுவையிலும் சிறந்ததாகவும். அதிக விலையும் கிடைக்கிறது. பந்தல் காய்கறியில புடலங்காய்களுக்கு, பராமரிப்புச் செலவு ரொம்பக் குறைவு. புடலைக் கொடி பந்தல் படர்ந்துஓடி நிழல் கட்டிடும்.
புடலங்காயின் வீரிய ரகம் 5 முதல் 6 மாசம் வரை இருக்கும். ஆனால், நாட்டு ரகம் 9 மாசம் வரைக்கும் இருக்கும். பொதுவாக வீரிய ரகத்தில விளைச்சல் அதிகமாகவே இருக்கும். ஆனா, முன்கூட்டியே முடிந்துவிடுவதால் முழுமையான பலன் கிடைக்காமல் போய்விடும். ஆனால், நாட்டு ரகம் தொடர்ந்து பலன் கொடுக்குறதால விலை ஏற்றத்தாழ்வுகளைச் சமாளித்து, வீரிய ரகத்தை தாண்டி கூட நல்ல லாபம் கொடுக்கும். வீரிய ரகத்தோட நாட்டுப் புடலங்காய் ரூ.2 அல்லது ரூ.3 கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்து சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால், இந்த ரகப் புடலங்காய்விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்வதில்லை.” என்று தெரிவித்தார்.
எவ்வளவு லாபம் கிடைக்கிறது :
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 40 கிலோ முதல் 50 கிலோ வரை புடலங்காய் அறுவடை செய்து வருகிறார் சக்திவேல். சந்தைகளில் ஒரு கிலோ ரூ.22 ரூபாய் முதல் ரூ.25க்கு விற்பனையாகிறது. தோட்டத்திலிருந்து நேரடியாக பறித்து சாலையில் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகிறார். வீரிய ரகப் புடலை விட சுவையிலும், மகசூலிலும், விலையிலும் விவசாயிகளுக்கு திருப்தியாக அமையக்கூடியது இந்த நாட்டு புடலை என்கிறார் விவசாய சக்திவேல்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், “ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது, அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 35 ஆயிரம் ரூபாய் வரை நீளமாக வளரக்கூடிய புடலையில் லாபம் பார்க்கிறேன். பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சந்தையிலிலும் அதிக அளவில் இந்த நீட்டுப் புடலையை வாங்கி செல்கின்றனர் என்பதால், எனக்கு நல்ல லாபம் வருகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் விவசாயி. அது மட்டுமல்லாமல் சில விவசாயிகள் என்னிடம் வந்து விதைகளை கேட்டு வாங்கி செல்கின்றனர்” என்கிறார் விவசாயி சக்திவேல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Villupuram