முகப்பு /வணிகம் /

வருசநாடு பகுதிகளில் போதிய விலை இல்லாததால் மரத்தில் இருந்தே பறிக்காமல் விடப்பட்ட இலவம் பஞ்சு காய்கள்

வருசநாடு பகுதிகளில் போதிய விலை இல்லாததால் மரத்தில் இருந்தே பறிக்காமல் விடப்பட்ட இலவம் பஞ்சு காய்கள்

X
தேனி

தேனி மாவட்டம் வருஷநாடு

Theni District | தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிகளில் அதிகளவு இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய விலை கிடைக்காதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிகளில் அதிகளவு இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உரிய விலை கிடைக்காதால்

விவசாயிகள் விரக்தியும் கவலையும்அடைந்துள்ளனர்.

பஞ்சு சாகுபடி :-

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, காமராஜபுரம், முருக்கோடை, தங்கம்மாள்புரம், கோரையூத்து, அரசரடி, வாலிப்பாறை, காந்திபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கோடை காலம் தொடங்கும் நேரத்தில் இலவம் பஞ்சு சாகுபடியும் தொடங்கும். சுமார் 3 மாதங்கள் இலவம் பஞ்சு சாகுபடி இருக்கும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஆண்டுக்கான இலவம் பஞ்சு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

அறுவடைக்கு தயார்நிலையில் உள்ள இலவம் பஞ்சு

ஒவ்வொரு மரத்திலும் ஆயிரக்கணக்கான இலவம் காய்கள் காய்த்துள்ளது. பெரும்பாலான காய்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அதேநேரத்தில் இலவம் பஞ்சுக்கு சந்தையில் போதுமான விலை இல்லாததால், இலவம் பஞ்சு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆ ண்டு ஒரு கிலோ இலவம் பஞ்சு ரூ100வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 50 ரூபாய்க்கு வாங்க யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க :  பழனி கோவிலில் 281 காலி பணியிடங்கள்.. மாத சம்பளம் ரூ.1,13,500 வரை வாங்கலாம் - முழு விவரம் இதோ..!

தற்போது உள்ள விலை, காய்களை மரத்தில் இருந்து பறிப்பதற்கு ஆகும் செலவுக்கு கூட போதுமானதாக இல்லாததால், வருசநாடு பகுதிகளில் இலவம் மரங்களில் விளைந்த இலவம் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இலவம் காய்கள் வெடித்து பஞ்சு காற்றில் பறந்து வருகிறது. ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே சாகுபடி நடைபெறும் நிலையில் போதுமான விலை இல்லாததால் இலவம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இலவம் பஞ்சுக்கு நிலையான விலையை அரசு நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று வருஷநாடு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    First published:

    Tags: Agriculture, Local News, Theni