முகப்பு /business /

இலவசமாகவே சொட்டு நீர் பாசன முறையை அமைக்கலாமா?  - விவரிக்கும் திருச்சி விவசாயி!

இலவசமாகவே சொட்டு நீர் பாசன முறையை அமைக்கலாமா?  - விவரிக்கும் திருச்சி விவசாயி!

X
சொட்டு

சொட்டு நீர் பாசனம்

Trichy Farmer : திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் உள்ள சிறுநாவலூர் கிராமத்தில்  சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வரும் விவசாயி ரத்தினம் அவர்களிடம் சொட்டு நீர் பாசன முறைப் பற்றி விவரிக்கிறார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் 20 ஆண்டுகளாக சொட்டு நீர் பாசனத்தில் அசத்தும் விவசாயி சொல்லும் அறிவுரை.

திருச்சியயை சேர்ந்த விவசாயி ரத்தினம். இவருடைய 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளை நிலத்தில், கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், மற்ற நேரங்களில் தண்ணீரை சேமிக்கவும் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருகிறார்.

சொட்டு நீர் பாசன மானியம்

சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாகவும், இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். அதாவது, சிறு மற்றும் குறு விவசாயிகள் மத்திய அரசின் 50 சதவீத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : கோடை நடவு அவசியமா..? தஞ்சை சித்தரின் கவனிக்க வைக்கும் கருத்து..!

இதர விவசாயிகள் மத்திய அரசின் 50 சதவீத மானியத்திலும் மாநில அரசின் 25 சதவீத மானியத்தையும் பெறலாம். அதேபோல் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43,816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத சொட்டு நீர் பாசனம் மானியம் தொகையின் அளவு ஆகும்.

சொட்டு நீர் பாசனம்

தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க மட்டுமல்ல, மின் மோட்டார், பி. வி. சி யைப் போன்றவை வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு குழாய் மூலம் பதிக்கும் செலவில் கூடுதலாக 3000 ரூபாய் பெறலாம் எனத் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

குழாய் பதிக்க வெட்டப்படும் குழியானது 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த குழி வெட்டும் செலவையும் சேர்த்து விண்ணப்பித்து மானியம் பெறலாம்.

பயன்கள் என்னென்ன? 

தண்ணீர் குறைந்த அளவில் செலுத்தப்படுவதால் ஆவியாதல், வழிந்தோடுதல் போன்ற பிரச்சனைகள் இல்லை. மிகக் குறைந்த மின்சார அளவே போதுமானதாக இருக்கிறது. குறைந்த பணியாளர்களே போதுமானது. உரங்கள் , தண்ணீர் வீணாக்கப்படுவது குறைவாகிறது. வேர்ப்பகுதியில் ஈரப்பதம் நிலை நிறுத்தப்படுகிறது.

சொட்டு நீர் பாசனம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    விவசாயத்தை மேம்படுத்தி விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து மானியமும் வழங்குகிறது. அவற்றை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    First published:

    Tags: Agriculture, Local News, Trichy