முகப்பு /செய்தி /வணிகம் / விவசாயிகளுக்கு புதிய இணையதளம் - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு புதிய இணையதளம் - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

Agriculture Budget | தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலங்களுக்கு சென்று பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தர வேண்டியுள்ளது.

இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள், அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கி கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து கணினி மையமாக்கி புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்.

இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும். இதன் மூலம் பயிர் கடன், நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கை பேரிடர் நிவாரணம் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை சார்ந்த 13-க்கும் மேற்பட்ட துறைகளில் பல்வேறு திட்ட பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாக பெரும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

First published:

Tags: Agriculture, TN Budget 2023