முகப்பு /business /

நெல் கொள்முதல் செய்ய பயோமெட்ரிக் முறை.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நெல் கொள்முதல் செய்ய பயோமெட்ரிக் முறை.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruvarur District Collector : திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குருவை அறுவடை பருவத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குருவை அறுவடை பருவத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவாரூர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் திருவாரூர் மாவட்டத்தின் நடப்பு பருவத்திற்கு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் கோடை பருவம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறையினை பின்பற்றி நெல்லினை விற்பனை செய்யலாம்.

இதையும் படிங்க : வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முறை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள்நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லை காலதாமதமின்றி உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யமுடியும்.

பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைபேசி எண்ணிற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் OTP பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விரல் ரேகை பதிவுமூலம் விவசாயிகளின் சுயவிவரங்கள் சரியாக உள்ளதா என்பதை கொள்முதல் நிலையங்களிலே சரிபார்த்துக்கொண்டு நெல்லினை விற்பனை செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Agriculture, Local News, Money18, Tiruvarur