முகப்பு /business /

வெண்டைக்காய் சாகுபடியில் இதை பண்ணுங்க செம்ம லாபம் கிடைக்கும்.. திருவாரூர் விவசாயி சொன்ன ட்ரிக்ஸ்..

வெண்டைக்காய் சாகுபடியில் இதை பண்ணுங்க செம்ம லாபம் கிடைக்கும்.. திருவாரூர் விவசாயி சொன்ன ட்ரிக்ஸ்..

X
வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாகுபடி

Ladies Finger Cultivation : கோடைகால பயிரான வெண்டைக்காய் விவசாயத்தில் கிடைக்கும் லாபம் குறித்து திருவாரூர் மாவட்ட விவசாயி சொன்ன தகவல்.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி வெண்டை சாகுபடியில் அதிக லாபம் பார்ப்பது எப்படி என விளக்கம் அளிக்கிறார்.

சைவ உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடும் பலரின் உணவு பட்டியலில் முதலாவதாக இருப்பது வெண்டைக்காய் தான். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் சார்ந்த உணவுகளை அதிக அளவில் பெற்றோர் வழங்குகின்றனர்.

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், அயன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயினை விவசாயிகள் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிரான வெண்டைக்காய் விவசாயத்தில் பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார்.

வெண்டைக்காய் சாகுபடி

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் சிமிழி கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் கூறுகையில், “பல ஆண்டுகளாக தோட்டக்கலை பயிர்களான கத்திரி, வெண்டை சோளம், உள்ளிட்டவைகளை கோடை கால பயிர்களாக பயிரிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் இந்த ஆண்டு கலை வெட்டுதல், உரம் வைத்தல் உள்ளிட்டவையோடு சுமார் 20,000 ரூபாய் செலவில் காய்கறிகள் சாகுபடி செய்திருக்கிறேன்.

இதிலிருந்து சுமார் 40,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். 3 மாத காலம் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்படும். நேரடியாக நானே சென்று விற்பனை செய்து வருகிறேன். குறைந்த அளவு பயிரிடப்பட்டுள்ளதால் பராமரிப்பு பணியை நானே மேற்கொண்டு வருகிறேன். வெண்டைக்காய் அறுவடை காலமானது 30 முதல் 40 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

நல்ல வளமானதாகவும், பசுமையானதாகவும் இருக்கும். அதேபோல் அதிகளவிலான உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதில்லை. டிஏபி,யூரியா, பொட்டாஷ் போன்ற அடி உரங்கள் மட்டும் வைக்கப்பட்டு வாரணைக்கப்படுகிறது. பூச்சி தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்ற பஞ்சகாவியம் கால்நடைகளின் கோமியம் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பூச்சி தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது மட்டும் ஏதேனும் ஒரு மருந்து மட்டும் கடைசி நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Agriculture, Local News, Tiruvarur