முகப்பு /business /

இயற்கை விவசாயம் செய்ய ஆசையா..? தேன்பொத்தை கிராமத்துக்கு ஒரு முறையாவது  போயிட்டு வாங்க..!

இயற்கை விவசாயம் செய்ய ஆசையா..? தேன்பொத்தை கிராமத்துக்கு ஒரு முறையாவது  போயிட்டு வாங்க..!

X
மாதிரி

மாதிரி படம்

Thenpothai Village : தென்காசி மாவட்டம் தேன்பொத்தை கிராமம் தமிழக அரசின் சிறந்த கிராமமாக திகழ்ந்து வருகிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தேன்பொத்தை கிராமம் தமிழக அரசின் சிறந்த கிராமமாக திகழ்ந்து வருகிறது. தேன்பொத்தையில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் எண்ணற்ற திட்டங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதற்காக முதலில் தேன்பொத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை புதுப்பித்து மகளிர் சுய உதவி குழுவுக்காக பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு பண்ணை சார் நடவடிக்கைகள் பண்ணை சாரா நடவடிக்கைகள் என இரு விதமாக பிரிக்கப்பட்டு அதன் மூலம் நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை தொகுப்பு, இயற்கை விவசாய தொகுப்பு, சிறு தொழில் தொகுப்பில் தொடங்கி, வட்டார வணிக மையம் சார்பாக கடன் உதவியும் பெற்று கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தி மாதிரி கிராமமாக மாற்ற, ஒவ்வொரு காலாண்டிற்கும் பிற துறைகளுடன் இணைந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தேன்பொத்தை கிராம பெண்கள்

இதையும் படிங்க : தேனிக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை.. அலறி ஓடிய மக்கள்!

இது கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம், விவசாயிகளுக்கு இலவச மண் பரிசோதனை முகாம், சிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இலவச கால்நடைகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் என பல நலத்திட்டங்களும் இதில் அடங்கும்.

மேலும் தேன்பொத்தை கிராமத்தில் தற்போது 30க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து இயற்கை விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு, மண்பாண்டங்கள் செய்தல், இயற்கை உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், தையல், எம்பிராய்டிங், பேக்கிங், கால்நடைகளுக்கு தேவையான உணவு தயாரித்தல் என பல தொழிலில் அக்கிராம பெண்கள் தடம் பதித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தேன்பொத்தை கிராமத்தில் இருக்கும் சுமார் 200 பெண்களும் தற்போது சுய தொழில் தொடங்கி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். மேலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் தேன்பொத்தை கிராமத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

    First published:

    Tags: Agriculture, Local News, Money18, Tenkasi