முகப்பு /வணிகம் /

அவ்வப்போது சாரல் மழை.. உழவு பணிகளை துவக்கிய பெரியகுளம் பகுதி விவசாயிகள்!

அவ்வப்போது சாரல் மழை.. உழவு பணிகளை துவக்கிய பெரியகுளம் பகுதி விவசாயிகள்!

X
தேனி

தேனி விவசாயிகள்

Theni Farmers : தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில் , 2ம் போக நெல் சாகுபடி செய்ய முதல் கட்ட உழவு பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Periyakulam, India

தேனி மாவட்டத்தில் கோடை காலம் காரணமாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் கும்பக்கரை, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியது.

சாரல் மழையால் வடகரை பகுதியில் உள்ள குளங்களில் நீர் நிரம்பி வரும் நிலையில்,வயல்வெளிகளில் நீர் நிறைந்து காணப்பட்டு வருகிறது. தொடர் மழையால் வயல்வெளிகளில் நிறைந்துள்ள நீரை பயன்படுத்தி பெரியகுளம் கீழவடகரை பகுதிகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் 2ஆம் போக நெல் சாகுபடி செய்ய முதல்கட்ட பணிகளான வயல்களில் உழவு பணிகளை துவக்கி உள்ளனர்.

மேலும் நெல் நாற்று விடப்பட்டு நடவு பணிக்கு தாயாராக உள்ளது. மேலும் தொடர்ந்து கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த ஆண்டு இரண்டாம் போக சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கும் என நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியுடன் உழவுப் பணிகளை செய்து வருகின்றனர். கோடைகாலத்தில் அவ்வப்போது பெய்த சாரல் மழை காரணமாக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Farmers, Local News, Periyakulam Constituency, Theni