முகப்பு /business /

ஐ.டியில் பணிப்புரிந்து கொண்டே இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தென்காசி இளைஞர்!

ஐ.டியில் பணிப்புரிந்து கொண்டே இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தென்காசி இளைஞர்!

X
இயற்கை

இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்

Tenkasi Youth : தென்காசி மாவட்டம் பனையூரில் 1000 தேனீ பெட்டிகளை வைத்து மாதம் 60 ஆயிரம் வரை லாபம் பார்த்து வரும் ஐ. டி பட்டதாரி.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் பனையூரில் ஐடியில் பணிபுரிந்து கொண்டே இயற்கை விவசாயம் செய்து வரும் கார்த்தி தன்னுடைய 18 ஏக்கர் தென்னை மரங்களுக்கு நடுவில் தேனி வளர்ப்புக்கான பெட்டிகளையும் வைத்து வளர்த்து வருகிறார். கடந்த 18 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வரும் கார்த்திக்கு 'kaabay' என தனக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கக்கூடிய மதிப்பு கூட்டு பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்று வருகிறார். தேன், தேங்காய் எண்ணெய், கூல்கந்த் என பல மதிப்பு கூட்டும் பொருட்களையும் அதில் விற்று வருகிறார். மேலும், இவரது 18 ஏக்கர் தென்னை தோப்பில் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தேன் பெட்டிகளால் தென்னை மரத்தின் விளைச்சல் அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் கார்த்திக்.

இந்த தேன் வளர்ப்பின் மூலம் 100% தேங்காய் விளைச்சலையும் பார்க்க முடியும் என்றும் பாலிநேசனுக்கு அதிக அளவில் தேன் வளர்ப்பு பயன்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதிலிருந்து ஒரு வருடத்தில் 2000 கிலோ கிராம் தேன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தென்காசி இளைஞர்

இதையும் படிங்க : ரயில்வே பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. மே 26ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கம்!

மேலும், தேன் வளர்ப்பதற்கான பெட்டிகளையும் 2500 ரூபாயிலிருந்து விற்பனை செய்தும் வருகிறார். இவர் விற்பனை செய்து வரும் தேன், தேன் பெட்டிகள் மற்றும் உபகரணங்களில் இருந்து மட்டும் மாதம் 60 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நேரம் கிடைக்கும்போது இலவசமாக தேனீ வளர்ப்பு முறைகள் குறித்தும் மக்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார் கார்த்திக்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Tenkasi