முகப்பு /வணிகம் /

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய தென்காசி ஆட்சியர்..

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய தென்காசி ஆட்சியர்..

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்

Tenkasi News | தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல் - 33660 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 19471 ஹெக்டேர், பயறு வகைகள் - 29280 ஹெக்டேர் பருத்தி - 4000, கரும்பு - 1850 ஹெக்டேர், எண்ணெய் வித்து - 1290 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில், விவசாய பயன்பாட்டிற்காக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 292 குளங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 18 குளங்களிலும் வண்டல் மண் எடுத்திட தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூட உத்தரவு.. மதுப்பிரியர்கள் ஷாக்..!

மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1500/- மானியத்துடன் பண்ணைக் கருவி மற்றும் ஒரு பயனாளிக்கு நெல் தரிசில் உளுந்து திட்டத்தின கீழ் ரூ.384/- மானியத்தில் உளுந்து விதைகள், தோட்டக்கலைத் துறை மூலம் பல்லாண்டு பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு தலா ஒரு ஹெக்டேரில் மா மற்றும் நெல்லி கன்றுகள் பயிரிட மொத்த ஊக்கத் தொகையாக ரூ.36000/- மானியமும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் இரண்டு பயனாளிகளுக்கு பவர் டில்லர் இயந்திரம் தலா ரூ.85000/- மானியத்திலும் ஒரு பயனாளிக்கு சுழற் கலப்பை ரூ.44800/- மானியத்திலும் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரவிசந்திரன் வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், கீழப்பாவூர் வட்டார வேளாண்மைத் துறையினர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தோட்டக்கலைத் துறையினர் மற்றும் தென்காசி, பட்டு வளர்ச்சித் துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் விவசாயப் பெருமக்கள் திரளாகப் பார்வையிட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சித் தலைவர், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 308 மனுக்களுக்கு 14 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    First published:

    Tags: Agriculture, Local News, Tenkasi