முகப்பு /வணிகம் /

பருத்தி சாகுபடியில் மும்முரமாக இறங்கியுள்ள தஞ்சை விவசாயிகள் - அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி!  

பருத்தி சாகுபடியில் மும்முரமாக இறங்கியுள்ள தஞ்சை விவசாயிகள் - அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி!  

பருத்தி சாகுபடி

பருத்தி சாகுபடி

Thanajvur News : தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருக்காவூர் பகுதியில் பருத்தி சாகுபடியில் ஓவர் பிஸியாக மாறியுள்ளனர் விவசாயிகள். 

  • Last Updated :
  • Thanjavur, India

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பிரதான பயிராக இருந்து வருகிறது. சம்பா, தாளடி, குறுவை என 3 போகங்களாக நெல் சாகுபடி நடைபெறும்நிலையில், மழைக்காலங்களில் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்டா பகுதியில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கோடையில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பாபநாசம் தாலுகாவில் அதிக அளவில்செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருக்கருகாவூர்,கரம்பத்தூர், நாகலூர், நிறைமதி, மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, வளத்தாமங்களம், புலிமங்களம், பொன்மான்மேய்ந்தநல்லூர், பண்டாரவாடை, ராஜகிரி மற்றும்கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விதைக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகின்றன. தற்போது பருத்தி செடிகளுக்கு இடையே மண்டியுள்ள களைகளை அகற்றி மருந்து வைக்கும் பருவம் ஆகும். இதனால் பருத்தி செடிகளுக்கு தொழிலாளர்களை கொண்டு களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Agriculture, Local News, Thanjavur