முகப்பு /செய்தி /வணிகம் / வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அத்துடன் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.

வேளாண்மையே மனிதன் மேற்கொண்ட முதல் தொழில் என மானுடவியல் சொல்கிறது என்று கூறிய அமைச்சர், ”வேளாண்மை என்பது தொழில்முறை அல்ல,வாழ்க்கை முறை. இயற்கையோடு நடத்தும் கண்ணாம்மூச்சி ஆட்டமாக வேளாண்மை மாறிவிட்டது.

top videos

    பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வேளாண் உற்பத்தியை பெருக்குவது அவசியமாகிறது. 2020 - 21ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021 - 21ல் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே நீர் திறந்ததால் உற்பத்தி அதிகரித்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

    First published:

    Tags: Agriculture, TN Budget 2023