முகப்பு /செய்தி /வணிகம் / நெல்லுக்கு கூடுதலாக ரூ.100 ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

நெல்லுக்கு கூடுதலாக ரூ.100 ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

நெல்லுக்கு கூடுதலாக ஊக்கத் தொகை வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங் கன்றுகள் வழங்கப்படும் என்றும், இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் கூறினார். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படுவதோடு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 14,500 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; விவசாயிகளுக்கு புதிய இணையதளம் - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

top videos

    மேலும், ரூபாய் 1500 கோடி வட்டி இல்லா கடனாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும், கூட்டுறவு பயிர் கடன்கள் வழங்க 14000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், “சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு கூடுதலாக ரூபாய் 100 ஊக்கத் தொகையாகவும், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 75 ஊக்கத் தொகையாகவும் வழங்கப்படும். 25 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார்.

    First published:

    Tags: Agriculture, Farmers, TN Budget 2023