தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.
புன்செய் நிலங்களிலும் மகசூலை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. தானியங்கள் மட்டுமல்லாது, காய்கறி, பழங்களை போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் சாகுபடி பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டர்களாக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வரலாறு காணாத அளவில் நேரடி கொள்முதல் மிக அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,695 கோடி காப்பீடு மானியமாக 6 லட்சத்திற்கு அதிகமான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 123 கோடியே 60 லட்சம் ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்பட்டது. இயந்திரங்கள் பயன்பாடு எளிதாகவும், சிக்கனமாகவும் இருக்கும் என்பதால் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாங்க மானியம் மற்றும் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, TN Budget 2023