முகப்பு /செய்தி /வணிகம் / சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்....

சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்....

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

Tamil Nadu Agriculture Budget 2023-24 : திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அடுத்த மாதம் 21-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, 3-வது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது.இதில், அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, வேளாண் உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, சிறுதானிய பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதுடன், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Agriculture, Tamil News, TN Budget 2023