முகப்பு /business /

திடீரென தீப்பிடிக்கும் கரும்பு தோட்டம்.. புதுவை விவசாயிகள் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

திடீரென தீப்பிடிக்கும் கரும்பு தோட்டம்.. புதுவை விவசாயிகள் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

X
திடீரென

திடீரென தீப்பிடிக்கும் கரும்பு தோட்டம்

Sugarcane Farming In Pondicherry : கரும்பு விவசாயம் அதிகம் செய்யும் கிராமம், புதுவையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் பயனில்லாமல் போகும் கரும்பு விவசாயம்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த சந்தை புதுகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாண்டவராயன், இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த இவரது கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த திருக்கனூர் சேதராப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அவரது கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து விவசாயின் உறவினர் மோகன் கூறுகையில், “புதுகுப்பத்தில் உள்ள எங்களது விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தேன். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தபோது கரும்பு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் வருவதற்குள் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து சேதமானது.

திடீரென தீப்பிடிக்கும் கரும்பு தோட்டம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் எனக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமம், விவசாய பகுதி நிறைந்ததாகும். இங்கு செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு வருகிறோம்.  கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டால் 10 கிலோமீட்டர் இடையே இடைவெளி உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தான் வாகனம் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் எங்கள் கிராமங்களில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர எங்கள் தொகுதி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Puducherry