முகப்பு /business /

விவசாயத்திற்கு பயன்படும் சோலார் உலர்த்தி.. ஆர்வம் காட்டும் தேனி விவசாயிகள்!

விவசாயத்திற்கு பயன்படும் சோலார் உலர்த்தி.. ஆர்வம் காட்டும் தேனி விவசாயிகள்!

X
விவசாயத்திற்கு

விவசாயத்திற்கு பயன்படும் சோலார் உலர்த்தி

Theni District Farmers : தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சுகுமார் விவசாய தேவைக்கு பயன்படும் சோலார் உலர்த்தியை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நபர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் போவதால் அவ்வப்போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தேவைக்கு அதிகமாக விளைபொருட்கள் உற்பத்தியாகும் பொழுது அதனை வீணடிக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகள் தற்போது கற்றுள்ளனர். விளைவித்த பொருள் வீணாகாமல் தடுப்பதற்கு வாழைக்காய், கொய்யா காய், உலர்திரட்சை, வெற்றிலை, மாங்காய், ஏலக்காய், இஞ்சி, தக்காளி என பல பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயத்திற்கு பயன்படும் சோலார் உலர்த்தி

விளைபொருளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பொழுது பொருள்களை நன்றாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த தேவையை சோலார் உலர்த்தி பூர்த்தி செய்து வருகிறது. சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது விரைவாகவும், சுகாதாரமான முறையிலும், உரிய நேரத்திலும் பொருட்களை காய வைக்க முடியும் என்பதால் சோலார் உலர்த்தியின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சிறிய அளவிலான சோலார் உலர்த்தியிலிருந்து பெரிய அளவிலான சோலார் உலர்த்தி வரை சந்தையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் அதிகம் சோலார் உணர்த்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக தனியாக சோலார் உலர்த்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கம்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமார்.

இதையும் படிங்க : 28 மாநிலங்களின் உணவுகள் ஒரே இடத்தில்..! கோவையில் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..!

 இது குறித்து சுகுமார் கூறுகையில், “சோலார் உலர்த்தியை இதுவரை பல விவசாயிகளுக்கு செய்து கொடுத்துள்ளேன். விவசாயிகளின் தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை தயார் செய்யலாம் . சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது காற்றில் பரவும் தூசியில் இருந்து பாதுகாப்பாகவும், திடீரென மழை வந்தால் மழையிலிருந்து பாதுகாக்கவும், விரைவான நேரத்தில் பொருட்களை காய வைக்கவும் உதவுகிறது. சோலார் உலர்த்தி மூலம் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகள் குறைக்கப்படுவதோடு வேலை ஆட்கள் குறைவு காலநிலை சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் அனைத்து வகையான பொருட்களையும் காயவைக்க முடியும் குறிப்பிட்ட வெப்பநிலை வந்தவுடன் தானியங்கியாக சோலார் உலர்த்தி கூடுதல் வெப்பத்தை வெளியேற்றி விடும். எவ்வளவு வெப்பம் உள்ளது என்பதை காண்பிப்பதற்கான டிஜிட்டல் பலகையும் இதில் உண்டு. சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது பொருட்களின் இயற்கை தன்மையை இழக்காமல் இயற்கையாகவே காய வைத்து எடுக்கலாம்

    First published:

    Tags: Agriculture, Local News, Theni