முகப்பு /business /

வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம்.. நெல்லை விவசாயிகள் சொன்ன கருத்து இதுதான்..

வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம்.. நெல்லை விவசாயிகள் சொன்ன கருத்து இதுதான்..

X
வாழைக்கென

வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம்

Research Center for Bananas | திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நலன்பெறும் வகையில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் நில உடைமை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது இதை கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டமானது மாநில அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படும். அதன்படி வரும் நிதியாண்டில் 2,054 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் 5 ஆயிரம் பவர் டிரில்லர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் விளையும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் வரும் ஆண்டில் கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காவலர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு.. திருச்சியில் எங்கு நடக்கிறது தெரியுமா?

குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 22,000 ஹெக்டரில் வாழை பயிரிடப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வாழைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், வேளாண் தொடர்பான பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்என்றும், இந்த பணிக்காக வேளாண் கல்லூரியில் ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வேளாண் அறிவியல் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார் என்று வேளாண்மை பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு நெல்லை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Agriculture, Local News, Tirunelveli