முகப்பு /business /

தஞ்சையில் சூடு பிடிக்க தொடங்கிய அறுவடை பணிகள்!

தஞ்சையில் சூடு பிடிக்க தொடங்கிய அறுவடை பணிகள்!

X
நெல்

நெல் அறுவடை, இயந்திரம் மூலம் வைக்கோல் சுருட்டுதல் 

Tanjore News | தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, தென்னமநாடு,தெக்கூர், பாச்சூர், பொய்யுண்டார்கோட்டை, வடக்கூர், சோழபுரம், ஆகிய ஒரத்தநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுசுற்றுப்புறபகுதிகளில் சம்பா, தாளடி நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பா, தாளடி சாகுபடி:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாகதிறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவு நடைபெற்றது. மேலும் நெல்லை தவிர கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

அறுவடை பணிகள் தீவிரம்:

தஞ்சைமாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு, பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், வடக்கூர் ஆகிய பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இதில் ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டு முன்னதாகவே அறுவடையை முடித்து நெல்லை விற்பனை செய்து உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் பல பகுதிகளில் அறுவடைக்காக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன பின்பு தொடர்ந்து பல பகுதிகளில் பனி பெய்ததால் மீண்டும் பயிர்கள் சேதம் அடைந்தன.

இயற்கை இடர்பாடு , காலதாமதம், காலநிலை மாற்றத்தால் பொங்கல் முடிந்து அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரம்:

பெரம்பலூர்,சேலம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து இருந்து அறுவடை எந்திரங்கள் வந்துள்ளன. இருப்பினும் அறுவடை செய்ய வேண்டிய ஏக்கர் அதிகளவில் உள்ளதால் ஒரத்தநாடு, தென்னமநாடு,தெக்கூர், பாச்சூர், பொய்யுண்டார்கோட்டை, வடக்கூர், சோழபுரம், ஆகிய ஒரத்தநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடனுக்குடனே அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு சென்று காய வைத்து உடனுக்குடன் விற்பனை செய்தும் வருகின்றனர்.

உடனுக்குடன் வைக்கோல் விற்பனை:

அறுவடை செய்யப்படும் வயல்களில் உள்ள வைகோல்களை இயந்திரங்கள் மூலம் சுருட்டி உடனுக்குடனே வெளிமாவட்டங்களுக்து ஒரு கட்டு வைக்கோல் ரூ.100-150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Agriculture, Thanjavur