கோஷ் என்பவர் கோகித்துர், பாம்பே, ஹிம்சாகர், லங்குரா சாரங்கா, பிம்லி, பிரா, சம்பா, ராணிபசந்த், பைனாப்பிள், அல்போன்சா, ஃபஸ்லி, கோலப்காஸ், பஞ்சவர்ணம் முதலிட்ட பல்வேறு வகை மாம்பழங்களை ஓரே மரத்தில் அறுவடை செய்து வருகிறார்.
மாம்பழ ஆராய்ச்சியாளரான குஷல் கோஷ் என்பவர் கிராஃப்டிங் (Grafting) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படக்கூடிய ஒட்டுமுறையை பயன்படுத்தி 165 வகை மாம்பழங்களை ஒரே மரத்தில் அறுவடை செய்து விவசாய துறையில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தி உள்ளார். அவர் கோகித்துர், பாம்பே, ஹிம்சாகர், லங்குரா சாரங்கா, பிம்லி, பிரா, சம்பா, ராணிபசந்த், பைனாப்பிள், அல்போன்சா, ஃபஸ்லி, கோலப்காஸ், பஞ்சவர்ணம் போன்ற மாம்பழ வகைகளை ஒரே மரத்தில் வளர்த்து வருகிறார்.
மூர்ஷிதாபாத்தின் நவாப்-ற்கு நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான மாம்பழங்களை ருசிப்பது மிகவும் பிடிக்குமாம். மேலும் அவற்றை தனது தோட்டத்திலும் வளர்த்து அழகு பார்ப்பாராம். அவரது தோட்டத்தில் 200க்கும் அதிகமான மாம்பழ வகைகள் கொண்ட மரங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
எனினும், ஒரு சில காரணங்களால் பல மாந்தோப்புகள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது ஒரு சில மாந்தோப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதிலும் அனைத்து மா மர வகைகளும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக நவாப்களுக்கு மிகவும் விருப்பமான பலவகையான மாம்பழ வகைகள் மூர்ஷிதாபாத்தில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.
மாம்பழ வளங்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோஷ், நவாப் காலகட்டத்தில் இருந்த மாம்பழ வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இவர் ஒரே மரத்தில் 165 -க்கும் அதிகமான மாம்பழ வகைகளை கிராஃப்டிங் செயல்முறை மூலமாக வளர்த்து வருகிறார். மேலும் இவர் லாம்போ, ஷியாம்பாக் முதலிய புதிய மாம்பழ வகைகளை கிராஸ் பிரீடிங் (Cross-breeding) மூலமாக உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கலப்பு இன மாம்பழங்களும் அற்புதமான சுவை மற்றும் வாசனையை கொண்டிருப்பதாக கோஷ் கூறுகிறார்.
"மூர்ஷிதாபாத்தில் இருந்து பலவகையான மாம்பழ வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதைக் கண்டேன். இந்த நிகழ்வு என்னை சிந்திக்க வைத்தது. மாம்பழ வகைகளை பாதுகாப்பதன் பொருட்டு ஒரே மரத்தில் எப்படி பல்வேறு மாம்பழ வகைகளை கிராஃப்டிங் செயல்முறை மூலம் வளர்க்கலாம் என்பதை தோட்டக்கலை (Horticulture) அதிகாரியிடம் இருந்து பயிற்சி பெற்றேன். இதனை தொடர்ந்து ஒரே மரத்தில் கிராஃப்டிங் மூலமாக பல்வேறு மாம்பழ வகைகளை வளர்க்க ஆரம்பித்தோம். இந்த மரம் இரண்டு ஆண்டுகள் கழித்து பழங்கள் கொடுக்க ஆரம்பித்தது."
Also Read : செல்போன் சார்ஜ் போடும் போது நேர்ந்த விபரீதம்.. 12 வயது சிறுமி மரணம்..
"நாங்கள் ஒரே ஒரு மாமரத்தில் கோகித்துர், பாம்பே, ஹிம்சாகர், லங்குரா சாரங்கா, பிம்லி, பிரா, சம்பா, ராணிபசந்த், பைனாப்பிள், அல்போன்சா, ஃபஸ்லி, கோலப்காஸ், பஞ்சவர்ணம் உள்ளிட்ட பல்வேறு மாம்பழ வகைகளை வளர்த்துள்ளோம். இந்த ஆண்டில் 100 மாம்பழ வகைகளை இரண்டு மரங்களில் உருவாக்கியுள்ளோம். ஏற்கனவே இருக்கும் வளத்தை பாதுகாப்பதன் மூலமாகவும், கிராஸ் பிரீடிங் செய்வதன் மூலமாகவும் நாங்கள் ஷியாம்பாக், லாம்போ உள்ளிட்ட ஒரு சில புதிய மாம்பழ வகைகளையும் உருவாக்கியுள்ளோம்.
இன்னும் பல்வேறு புதிய மாம்பழ வகைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாம்பழ வகைகளை நாங்கள் நிச்சியமாக உருவாக்குவோம்" என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Mango, Viral