முகப்பு /வணிகம் /

மாடித்தோட்ட கிட் வேண்டுமா? புதுக்கோட்டையில் மானிய விலையில் கிடைக்கும்!

மாடித்தோட்ட கிட் வேண்டுமா? புதுக்கோட்டையில் மானிய விலையில் கிடைக்கும்!

X
மாடி

மாடி தோட்ட தொகுப்புடன் புவனேஸ்வரி 

Pudukkottai agriculture | புதுக்கோட்டை மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் மூலம் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான கிட் வழங்கப்படுகிறது.

  • Last Updated :
  • Pudukkottai, India

மாடி தோட்டம் அமைப்பதை பலரும் விரும்பும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் மூலம் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.

தற்போது பலரும் மாடி தோட்ட செயல்முறையை விரும்புகின்றனர். அதாவது தங்களுக்கு தேவையான காய்கறி செடிகள், மூலிகை செடிகள் போன்றவற்றை மாடியில் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த மாடி தோட்டமானது நகர்ப்புறங்களிலும் தற்போது அதிக அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, பலரும் மூலிகை செடிகளையும் மாடி தோட்டத்தின் மூலம் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்ட மூலிகை தொகுப்பை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறது.

மாடித்தோட்டம் அமைப்பதற்கான மானிய விலையில் உபகரணங்களையும், தமிழக அரசு கொடுத்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும்.

இந்த தொகுப்பினை அனைவருமே பெற்றுக் கொள்ளலாம். அதாவது அருகில் இருக்கும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களிலும், உழவன் செயலி மூலமாக பதிவு செய்தும் இந்த தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

மானிய விலையில் வழங்கப்படும் மூலிகை மாடி தோட்ட தொகுப்பில் 10 குரோபேக்குகள், 20 கிலோ தேங்காய் நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம், அத்துடன் 10 மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. இந்த மாடி தோட்ட மூலிகை தொகுப்பின் மொத்த விலை 1,500 அதில் 750 அரசின் மானியமாகவும், வாங்குபவர்களின் பங்கு தொகையாக 750 ரூபாயும் உள்ளது.

top videos

    இந்த மாடி தோட்டம் மூலிகை தலை தொகுப்பினை வாங்கிய புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பெண் புவனேஸ்வரி பேசுகையில், இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதாவது ஒவ்வொரு பொருளையும் வெளியே வாங்கினால் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்கும். ஆனால், இது தொகுப்பாக மொத்தமாக ஒரே இடத்தில் கிடைப்பதனால் போக்குவரத்து செலவினங்களும் எங்களுக்கு மிச்சம் ஆகிறது. மேலும், மாடித்தோட்டத்தில் காய்கறி செடிகளோடு இந்த மூலிகை தொகுப்பையும் வளர்ப்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Agriculture, Local News, Pudukkottai