புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரம் வானத்திராயன்பட்டி கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை கள ஆய்வு மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் திரு மரிய ரவி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது .
இம் முகாமில் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஆகியோர் கலந்து கொண்டனர் சமீபகாலமாக தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகிறது.
அதனால் குறிப்பிடத்தக்க மகசூல் இழப்பு ஏற்படுகிறது தற்சமயம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கருங்கலைப்புழு ரூகோஸ் வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளும் கேரள வாடல் நோய் குறித்து அழுகல் நோய் மற்றும்வாடல் நோய் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை துறை இயக்குனர் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் வெள்ளை தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
தொடர்ந்து வெப்பநிலை நிலவினால் இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தி தென்னையில் வெள்ளை சுருள் ஈக்களை கட்டுப்படுத்த முடியும் என திரு மரியரவி ஜெயக்குமார் வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம்விவசாயிகள் மட்டுமே எடுத்துரைத்தார்.
மேலும் இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை முறைகளை பற்றியும் ஐந்திலை கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவியம் மற்றும் இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் தயாரித்தல் முறைகள் பற்றியும் விளக்கி கூறினார். வேளாண் அறிவியல் நிலையம் வம்பன் பேராசிரியர் திருமதி விஜயலட்சுமி விதை வல்லுநர் , தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை தாக்குதலை கட்டுப்படுத்த விசை தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி இலைகளுக்கு அடிபுரத்தில் அடிக்கும் போது இப்பூச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
மஞ்சள் நிற பாலத்தின் தாள்களால் ஆன ஒட்டு பொறிகள் ஏக்கருக்கு எட்டு என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிடுவதால் சுற்றியும் உள்ள வெள்ளை ஈ க்களை கவர்ந்த அளிக்கலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குவியல்கள் மூலம் ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம் எனவும் தொழில்நுட்பம் கூறினார்.
காண்டாமிருக வண்டு இளம் கன்றுகள் மற்றும் வளரும் கன்றுகளை பெருமளவில் தாக்குகின்றன. இதனால் தாக்கப்பட்ட ஓலைகள் விரிந்த உடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்று தென்படும் இப் பூச்சிகளின் இனவிருத்திகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் தென்னை மரத்திற்கு சற்று தொலைவில் அமைப்பதால் வண்டுகள் சேகரித்து அளிக்கப்படுகின்றன.
ஆமணக்கு பின்னாக்கு மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றை ஐந்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பானைகளில் ஏக்கருக்கு 30 வீதம் வைத்து வண்டுகளை கட்டுப்படுத்தலாம் தரமான விதைகளை விதைப்பதற்கு முன்பு எவ்வாறு விதை நேர்த்தி செய்வது பயிர்களின் சத்து குறைபாடு எவ்வாறு கண்டறிவது அதற்கு ஏற்ப நுண்ணூட்டக் கலவைகளை பயன்படுத்துதல் பற்றியும் விளக்கி கூறினார். தோட்டக்கலை அலுவலர் திருமதி அருள் மேரிதென்னை ரகங்களை தேர்வு செய்தல் பற்றி கூறினார்.
வேளாண்மை அலுவலர் செல்வி, சீலா ராணிமண்வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்திடவும் அவ்வப்போதும் மன் மாதிரி சேகரித்து மண்ணில் உள்ள சத்துகளுக்கு ஏற்ப தேவையான அளவு உரம் இடவும் மண்வளத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி வேளாண்மை அலுவலர் திரு. ராஜா மற்றும் திரு. ஆரோக்கியராஜ் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர் செய்து இருந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai