புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டு அப்பகுதியை பசுமை நிறைய வைத்துள்ளார் அந்த கல்லூரி முதல்வர்
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி 1961 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் வெறும் பத்து மரங்கள் மட்டுமே கடந்த 2017 ஆம் ஆண்டு வரை காணப்பட்டது. இந்நிலையில் 2017 இல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சசிகாந்தாஸ் என்பவர் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்பு கல்லூரி வளாகத்தை சுற்றிப் பார்த்த போது வெறும் புதர் மட்டுமே மண்டி இருந்துள்ளது மேலும் இந்த பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்துள்ளது. இது கல்லூரி முதல்வருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கல்லூரி வளாகம் முழுவதும் பசுமையாக மாற்ற திட்டமிட்டார்.
கல்லூரி வளாகத்தை சுத்தம் படுத்தி சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அப்பகுதி முழுவதும் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஊழியர்கள் துணையுடன் நட்டார். ஐந்து ஆண்டுகளாக அனைவராலும் இந்த கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்டதால் இவற்றை பராமரிக்க சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து செய்த்தால் தற்போது கல்லூரி வளாகம் முழுவதும் பசுமை போர்வையுடன் காணமுடிகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கான்கிரீட்காடாக இருந்த பகுதி தற்போது ஒரு சிறிய வனப்பகுதியாக மாறி உள்ளது. குறிப்பாக இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் 5000 மரங்கள் இருக்கின்றன. 25 வகையான பட்டாம் பூச்சிகள் வந்து செல்கின்றன. மேலும் பல பறவைகள் தங்களின் வாழ்விடமாக இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளது.
இங்கு பூந்தோட்டம் காய்கறி மற்றும் பழ தோட்டங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் கல்லூரி வளாகத்தில் முயல்,புறா,மயில்,குயில் உள்ளிட்ட பறவைகளும் விலங்குகளையும் மாணவர்கள் உதவியுடன் வளர்த்து வருகிறார் கல்லூரி முதல்வர் சசிகாந்தாஸ். தற்போது இந்த கல்லூரி வளாகத்தில் நுழையும் போதே வெயிலின் தாக்கம் தணிந்து ஒரு சில்லென்ற அனுபவத்தை உணரமுடிகிறது. எல்லா புகழும் கல்லூரி முதல்வருக்கேசேரும் அவரின் உழைப்பால் உருவான இந்த சோலையைபிரமிப்போது பார்த்து விடை பெற்றோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry