முகப்பு /business /

மழையில் சேதமான பயிர்.. கண்ணீர் வடிக்கும் விவசாயி.. உதவி செய்யுமா அரசு?

மழையில் சேதமான பயிர்.. கண்ணீர் வடிக்கும் விவசாயி.. உதவி செய்யுமா அரசு?

X
புதுச்சேரி

புதுச்சேரி விவசாயி

Puducherry Rain | புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பெய்த கனமழையால் பயிர்கள் மொத்தம் நீரில் மூழ்கி வீணானதால் விவசாயி கவலையடைந்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் ராஜகோபால் என்ற விவசாயி தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலங்களில் பயிர் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக 17 சென்டி மீட்டர் அளவு பெய்த கோடை மழையின் காரணமாக, இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த நிலத்தில் நான்கு முறை களை எடுக்கப்பட்டு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

பயிரிட்டு மூன்றரை மாதங்கள் ஆகும் நிலையில், அந்த மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட நிலத்தில் தண்ணீர் முழுவதும் மூழ்கி பயிர் சேதமானது. இந்நிலையில், ராஜகோபால் வாங்கிய கடன், குடும்பத்தை நிலை நிறுத்த முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அதை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயி வாழ்வாதாரத்தை எடுத்துச் செல்ல வழியின்றி தவித்து வருவதாக கூறினார்.

புதுச்சேரி விவசாயி

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயத் துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவருடைய நிலத்தை பார்வையிட்டு அவருக்கு மாற்று வழி செய்யுமாறு விவசாயம் செய்வதற்கு விவசாயத் துறை மூலமாக உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Local News, Puducherry