முகப்பு /business /

காய்கறி சாகுபடி செய்வது எப்படி? புதுவையில் செயல் விளக்க முகாம்..

காய்கறி சாகுபடி செய்வது எப்படி? புதுவையில் செயல் விளக்க முகாம்..

X
காய்கறி

காய்கறி சாகுபடி செய்வதற்கான செயல் விளக்க முகாம்

Puducherry Agricluture Farmers Meeting | புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் அதில் லாபம் எவ்வாறு பெறுவது என்பதை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரிக்கலாம்பக்கம் உழவர் உதவிகத்தைச் சார்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு காய்கறி பயிரிடும் வகையில் ஊக்குவிக்கும் வகையிலும் அதில் லாபம் எவ்வாறு பெறுவது என்பதை குறித்து அதற்காக பயிற்சி முகாம் நடைபெற்றது.

கரிக்கலாம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த பயிற்சியில் முன்னதாக வேளாண் அலுவலர் தினகரன் அவர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி செய்யும் முறை அதன் பயன்கள் அதில் எவ்வாறு லாபம் அடைவது குறித்து விளக்கிப் பேசினார். மருத்துவர் செல்வமுத்து அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலவித்து ஆத்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகள் எவ்வாறு பயன்பெற்று வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற விவசாயிகளை முன்னிலைப்படுத்தி இனி செயல்படுத்த படப்படும் திட்டங்கள் குறித்த விளக்கி கூறினார். இந்த முகாமில் கரிக்கலாம்பாக்கம் மற்றும் ஏம்பலம் கோர்க்காடு ஆகிய பகுதிகள் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டது.

மேலும் காய்கறி விதை மினி கிட் மற்றும் காய்கறிகளின் மேல் தெளிப்பதற்கான ஸ்பிரேயர் மற்றும் நுண்ணுயூட்டி சத்து ஆகியவைகள் ஆத்மா திட்டத்தின் மூலமாக இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இறுதியில் கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் அவர்கள் நன்றி உரையாற்றினார். விழாவின் ஏற்பாடுகளை தப்பு சாமிஅவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

First published:

Tags: Local News, Puducherry