முகப்பு /business /

மண்புழு உரம் வேண்டுமா? வீட்டில் உள்ள குப்பைகளை வைத்தே 40 நாளில் தயாரிக்கலாம்!

மண்புழு உரம் வேண்டுமா? வீட்டில் உள்ள குப்பைகளை வைத்தே 40 நாளில் தயாரிக்கலாம்!

X
தென்காசி

தென்காசி விவசாயி

Earthworm fertilizer | தென்காசி மாவட்டம் தேன் பொத்தை கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை தொகுப்பு திட்டத்தின் கீழ் பெண்கள் சுய உதவி குழு மூலம் இயற்கை மண் புழு உரம் தயார் செய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

முன்னர் காலத்தில் இயற்கை உரங்களை கொண்டு மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வந்தது இதன் மூலம் நிறைவான உற்பத்தி மற்றும் மண்வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது பெருவாரியான இடங்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய ரசாயன உரங்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

அதனை மாற்றும் நோக்கில் தேன்பொத்தை கிராம பெண்களால் தொடங்கப்பட்ட இயற்கை விவசாயம். ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை தொகுப்பு திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயார் செய்து வருகின்றனர். பிரத்யோகமாக ஒரு இடம் அமைத்து அதில் தொட்டிகள் கட்டி குப்பைகளை சேமித்து அதில் இருந்து மண்புழு உரம் தயாரித்து வருகின்றனர்.

மண்புழு உரம் கிலோ 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர் இதற்காக ஆரம்ப கட்டத்தில் குப்பைகளை சேமிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டதாகவும் மண்புழு மட்டுமே ஆயிரம் ரூபாய் வாங்கியதாகவும் கூறுகின்றனர்.

குப்பைகளை சேமிப்பதற்கு கடும் சவாலாக இருந்த நிலையில் தற்போது விஷேச வீடுகளில் இருந்து மிதமான காய்கறிகள் மற்றும் இலைகள், தோப்புகளில் காய்ந்து உதிர்ந்த இலைகள் என பலவற்றை தற்போது சேகரிக்க தொடங்கி விட்டனர்.

நீங்களும் உங்கள் வீட்டில் மண்புழு உரம் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கான ஒரு சரியான இடத்தை தேர்வு செய்து அதில் படுக்கைகளை தயார் செய்து கொள்ளுங்கள்.

குப்பைகள் மட்டும் சாணங்கள் நிரப்பிய பிறகு மண்புழுக்களை வேண்டும் சாணத்தை சாப்பிட்ட மண்புழு உரமாக மாறும் இதற்கு தினமும் தண்ணீர் தெளித்து கிளறி விட வேண்டும். ஒரு தொட்டியில் ஒரு கிலோ மண்புழு போட்டால் அது அறுவடை செய்யும் பொழுது நான்கு கிலோவாக மாறிவிடும் இதன் மூலம் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் தான்.மேலும் மண்புழு உரமாக மாறுவதற்கு 40 நாள் செலவாகும். மேலும் இதனை ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் விதம் விற்பனையும் செய்து வருகின்றனர்.

இது போன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக இந்த பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Tenkasi