திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டாரத்தில் பிசாணப் பருவஅறுவடை தீவிரமடைந்துள்ளது. மழை பொய்த்துப் போனதால் வைக்கோல் விற்பனை தனிக் கவனம் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் மற்றும் பிசாணப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 2022ம் ஆண்டில் கார் பருவ சாகுபடி பல இடங்களில் பொய்த்துபோனது. வடகிழக்கு பருவமழையை நம்பி பிசாணப் பருவ சாகுபடி விவசாயிகள் தொடங்கினார். ஆனால், வடகிழக்கு பருவமழையும் போதிய அளவில் பெய்யவில்லை. பாபநாசம் சேர்வலாறு அணிநீரை நம்பி கால்வாய்களில் பிசாணப் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
எனினும், நிகழாண்டில் வழக்கத்தை விட குறைவாக (சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர்) பகுதியிலேயே பிசாணப் பருவசாகுபடி செய்யப்பட்டது. பாளையங்கோட்டை வட்டாரத்தில் மேலநத்தம், குல வன்னியர் புரம், நொச்சிக்குளம் சுற்றுவட்டாரத்தில் 70 சதவீத வயல்களில் சாகுபடி செய்யப்படவில்லை. மேலப்பாட்டம், கீழப்பாட்டம் பகுதிகளில் மட்டுமே பாளையங்கால்வாய் பாசனத்தில் முழுமையாக பிசாணசாகுபடி நடைபெற்றது. அம்பை 16, ஆடுதுறை 45, டிபிஎஸ் 5, சிஓ 51, பிபிடி உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாளையங்கோட்டை வட்டாரத்தில் பிசான பருவ அறுவடை தீவிரமடைந்துள்ளது. அறுவடை இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரங்களுக்கு காத்திருக்காமல் விவசாயிகள் பாரம்பரிய முறையில் நெற்கதிரை அடித்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் மழை பொய்த்துபோனதால் மானாவரி சாகுபடி முற்றிலும் முடங்கியுள்ளது. ஆகவே, வேர் கடலை செடி உள்ளிட்டவைகள் கால்நடைகளுக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வைகோலை வாங்கி சேமிப்பதில் கால்நடை வளர்ப்போர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Tirunelveli