முகப்பு /வணிகம் /

ஸ்ட்ராபெரி சாகுபடி செய்வது லாபமானதா? - விளக்கும் நீலகிரி விவசாயி

ஸ்ட்ராபெரி சாகுபடி செய்வது லாபமானதா? - விளக்கும் நீலகிரி விவசாயி

X
ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி சாகுபடி செய்வது லாபமானதா? - விளக்கும் நீலகிரி விவசாயி

Nilgiris Strawberry Farming | உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ட்ராபெரி விவசாயம் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறிகளின் விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மலை காய்கறிகள் மற்றும் தேயிலை தவிர்த்து பல்வேறு ஊடுபயிர்களும் இங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி பழ விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாக காட்சியளிக்கும் ஸ்ட்ராபெரி பழங்கள் இந்தியாவில் புனே, நீலகிரி உள்ளிட்ட மலை பகுதிகளில் அதிக அளவு விளைச்சல் தரக்கூடியதாக உள்ளது. 30 டிகிரி செல்சியஸ்-க் கு மிகாமலும்-3 டிகிரி செல்சியஸ்-க்கு குறையாமலும் வெப்பநிலை இருக்க வேண்டும் என்பதால் நீலகிரி ஸ்ட்ராபெரி பண்ணைகளில் சுற்றிலும் குடில்கள் அமைக்கப்பட்டு, சொட்டு நீர் பாசான அமைப்புகள் மூலம்பராமரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஒரு செடியின் ஆயுள் காலம் ஒரு ஆண்டு வரை இருக்கும்.ஒரு செடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழம் பறிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டுவிற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு விளையும் ஸ்ட்ராபெரி பழங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரக்கூடியது எனவும் இவற்றை விளைவிக்கும் விவசாயிகள் கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris