விழுப்புரம் மாவட்டம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(42) என்ற விவசாயி 11 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவர் விரட்டிகுப்பம் பகுதியில் உள்ள தனது நிலமான 40 சென்ட் இடத்தில் செவந்தம்பட்டி என்ற நாட்டு ரகத்தில் நீளமாகவும், குண்டாகவும் காய்க்கும் கத்திரிக்காய் பயிர் செய்துள்ளார்.
இந்த கத்திரிக்காய் சாகுபடி முறை பற்றி விவசாயி பாண்டியன் கூறுகையில், கத்திரிக்காய் சாகுபடியில் நல்ல பராமரிப்பு இருந்தால் நிச்சயமாக நல்ல லாபம் பார்க்க முடியும் என ஆரம்பித்த அவர், முதலில் கத்திரிக்காய் பயிர் செய்ய விரும்பும் விவசாயி அதிக ஏக்கரில் பயிர் செய்யாமல் முதலில் 30 சென்ட் 20 செகண்ட் என்ற குறைந்த அளவில் பயிர் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் ஏக்கர் கணக்கில் பயிர் செய்ய வேண்டும்.
நான் 40 சென்ட் நிலப்பரப்பில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகிறேன். நடவு செய்த 55 நாட்களுக்குப் பிறகு செடியில் காய்கள் காய்க்கு தொடங்கும். 40 சென்ட் நிலப்பரப்பில் ஆயிரம் செடிகள் எனக்கு தேவைப்பட்டன.
இதையும் படிங்க : 3 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட சுருளி அருவி..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
ஒரு செடிக்கு குறைந்தபட்சம் 30 கிராம் அளவுள்ள கத்திரிகாய்கள் காய்க்கும். 70 நாள் கேப்பில் ஒரு பறிக்கு 100 கிலோ வரை கத்திரிக்காய்கள் காய்க்கும். கத்திரிக்காய் சாகுபடி செய்பவர்கள் நிச்சயமாக நிலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக பராமரிக்க வேண்டும். நிலத்தில் எந்த ஒரு களைகளும் இருக்கக் கூடாது. ஒரு மாதத்திற்கு 5 ஐந்து முறை காய்களை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு பத்தாயிரம் ரூபாய் என்றாலுமே நல்ல வருமானம் தான்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கத்தரி செடிகளின் நெருக்கமாக நடாமல் 3×3 அடி என்ற இடைவெளியில் நட வேண்டும். நான் 30 சென்ட் நிலப்பரப்புக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடாக போட்டேன். நாற்று வாங்குவதற்கு 500 ரூபாய் ஆனது. நிச்சயமாக நல்ல பராமரிப்பு இருந்தால் கத்திரி செடிகளில் ஒரு ஏக்கரில் இரண்டு லட்ச ரூபாய் வரை ஒரு போகத்திற்கு சம்பாதிக்கலாம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் பாண்டியன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Villupuram