முகப்பு /business /

அருப்புக்கோட்டை அருகே உள்ளூர் பயிர் ரகங்கள் கண்காட்சி.. கண்டுகளித்த மக்கள்!

அருப்புக்கோட்டை அருகே உள்ளூர் பயிர் ரகங்கள் கண்காட்சி.. கண்டுகளித்த மக்கள்!

X
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை கண்காட்சி

Virudhunagar News | அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற கண்காட்சியில் உள்ளூர் பயிர் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் பாரம்பரியமிக்க உயர்தர உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

கடந்த மார்ச் 14ம் தேதி அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் மாவட்ட வேளாண் - உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற கண்காட்சியில் பாரம்பரியமிக்க உயர்த்தர உள்ளூர் பயிர் ரகங்கள் காட்சிக்கு வைக்கபப்பட்டன.

பயிர் ரகங்கள் குறித்து அறிந்த விவசாயிகள்

கருப்பு கவுணி அரசி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா போன்ற நெல்ரகங்களும், சிறுதானியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், கண்காட்சிக்கு வந்திருந்த விவசாயிகள் அதை பார்வையிட்டு அதை பற்றிய விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

முன்னதாக இக்கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விவசாயிகளிடையே சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானியங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

இதனை அடுத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய விஞ்ஞானிகள் சிலர் தங்களின் கருத்துக்களை பரிமாறி கொண்ட நிலையில், இறுதியாக விவசாயம் குறித்த விழிப்புணர்வோடு நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியோடு கண்காட்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்துவிருதுநகர் மாவட்ட வேளாண்மை இனைஇயக்குநர் உத்தண்ட இராமன் கூறுகையில், இக்கண்காட்சியில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டதாகவும், அவர்களுக்கு சிறுதானிய மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Virudhunagar