முகலாயர் காலத்தில், மன்னர்களின் காதல் முதல் சமீபத்திய காதலர் தினம் வரை, ரோஜாவின் தேவை காலங்காலமாக மாறாமல் உள்ளது. ரோஜா பூ காதல் மற்றும் அன்பின் அடையாளமாக கருதப்படும் மலராக நம் அனைவரது மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது. ரோஜாக்கள் அதன் அழகை தவிர ஆரோக்கிய நன்மைக்கான பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
ரோஜா வெறும் பூக்களாக பயன்படுவது மட்டுமின்றி ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் குல்கந்து அல்லது குல்கந்த் எனப்படும் சுவையான ரோஜா இதழ்கள் நமது இந்திய துணை கண்டத்தில் மிகவும் பிரபலமானவை. சர்க்கரை மற்றும் தனித்துவமான இளஞ்சிவப்பு ரோஜா இதழ்களை இணைத்து குல்கந்த் தயாரிக்கப்படுகிறது. ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ரோஜா குல்கந்து மருத்துவ குணம் வாய்ந்தது.
மேலும் படிக்க : இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்... ஒரு கிராம மக்களின் நம்பிக்கை... மேற்கு வங்கத்தில் விநோதம்...!
ரோஜா மலரின் இதழ்கள் பிரித்தெடுக்கப்பட்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு சர்க்கரையுடன் குறைந்த வெப்பத்தில் வேக வைக்கப்படுகின்றன. பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய ரோஜா குல்கந்த்திற்கு மார்க்கெட்டில் அதிக மதிப்பு உள்ளது. கர்நாடகாவின் Kalaburagi பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் ரோஜாக்களை வளர்த்து, அதிலிருந்து குல்கந்தை தயார் செய்து உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறார்.
கலபுர்கியின் சேடம் தாலுகாவில் உள்ள Satpatalli-யை சேர்ந்த ரமேஷ் தபாடியா (Ramesh Tapadia) என்ற விவசாயி தனது வயலில் ஸ்பெஷல் டைப் ரோஜாவை பயிரிட்டுள்ளார். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ரமேஷ் தபாடியா சுமார் 10 ஏக்கர் நிலத்தில் பல பயிர்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். இந்த 10 ஏக்கரில், சுமார் 1 ஏக்கர் பரப்பளவை இவர் ஒரு சிறப்பு வகை ரோஜா பூக்களை பயிரிட பயன்படுத்துகிறார்.
மேலும் படிக்க : Viduthalai FDFS Review | ரொமான்சில் மாதவனுக்கே டஃப் கொடுத்த சூரி..! விடுதலை மூவி ரிவ்யூ..!
இதற்காக ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்ற கிராமத்தில் இருந்து ஒரு ஸ்பெஷல் பிங்க் ரோஜா மலர் செடியை ரமேஷ் தனது ஊருக்கு கொண்டு வந்துள்ளார். பிங்க் ரோஜா செடியின் விதைகளை ராஜஸ்தானிலிருந்து கொண்டு வந்த இவர் தனது தோட்டத்தில் உள்ள 1 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்தார். இப்போது அந்த 1 ஏக்கர் முழுவதும் ரோஜா செடி செழிப்பாக வளர்ந்து நிற்பதால் அவற்றின் இதழ்களை குல்கந்து தயாரிக்க பயன்படுத்தி கொள்கிறார். குல்கந்த் மற்றும் ரோஸ்வாட்டருக்கு தேவையான ரோஜா இதழ்களை தயார் செய்ய ஒரு பெண் குழுவையும் விவசாயியான ரமேஷ் பணியமர்த்தியுள்ளார்.
கெமிக்கல்ஸ் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கையாகவே குல்கந்த் மற்றும் ரோஸ்வாட்டரை இவர்கள் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அற்புதமான மருத்துவ பயன்கள் கொண்ட குல்கந்தை ரமேஷ் அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து சென்று மலிவு விலையில் விற்று பயனடைகிறார். இதுபற்றி கூறியிருக்கும் ரமேஷ் பிரத்யேகமாக தயார் செய்யப்படும் குல்கந்த்-ஆனது கலபுர்கி அல்லது கர்நாடகாவில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் பிரபலமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவரது குல்கந்த் மற்றும் ரோஸ் வாட்டர் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவிலும் பிரபலமாக இருக்கின்றன. ரமேஷ் தனது தோட்டத்தில் பூக்கள் மட்டுமின்றி காய்கறிகள், மாங்காய் உள்ளிட்ட பலவற்றையும் பயிரிட்டுள்ளார். என்றாலும் இவர் ஸ்பெஷல் ரோஜா பூக்களை பயிரிட்டு வருவதற்காக இவர் வசிக்கும் பகுதியில் பிரபலமான விவசாயியாக இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Business, Rose