ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலான பிரதான தொழிலாக இருந்தாலும், திருவாடானை, கமுதி, பரமக்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், குண்டுமிளகாய், சீசனுக்கு ஏற்ப வேர்கடலை, சோளம் போன்றவற்றை விவசாயம் செய்கின்றனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த தங்கச்சிமடம் பகுதியில் உள்ள கடல் மண்ணில் மல்லிகை விவசாயமானது குடும்ப தொழில் போன்று அப்பகுதியினர் செய்து வருகின்றனர். இதுபோக தற்போது, தங்கச்சிமடம் பகுதியில் வெட்டிவேர் மற்றும் லெமன் கிராஸ் என்றிழைக்கப்படும் கூடிய எழுமிச்சை புல்லானது அரை ஏக்கர் பரப்பளவில் வளர்த்து அறுவடை செய்ய தொடங்கி உள்ளார் விவசாயி செந்தில்குமார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “கடந்த 8 மாதங்களுக்கு முன் எழுமிச்சை புல் செடிகளை நட்டு விவசாயம் செய்ய தொடங்கி உள்ளோம். பெங்களூரைச் சேர்ந்த CIMOF என்ற நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது அருவடைக்கு தயாராக உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மூலமாக லெமன் டீ, எழுமிச்சை சோப் பார்கள், எழுமிச்சை மணமுடைய நறுமணம் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
இதையும் படிங்க : தினந்தோறும் 40 லட்சம் முட்டை ஏற்றுமதி.. நாமக்கல் கோழி முட்டை ஏற்றுமதியாளர் தகவல்!
கடல்மண் என்பதால் மூன்று வேலைகளிலும் நன்கு தண்ணீர் விட்டால் போதும் நன்கு வளருமாம், எந்தவொரு உரங்களுமின்றி இயற்கையாகவே வளர்வதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதன்முறையாக அறுவடை தொடங்கி உள்ளதால் இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுத்து விற்பனை செய்த பிறகுதான் இதில் எவ்வளவு லாபம் உள்ளது கணிக்க முடியும்.
வருடத்திற்கு மூன்று முறை அதாவது நடவு செய்து எட்டு மாதங்கள் வந்தவுடன் முதல் அறுவை செய்ய தொடங்கி உள்ளோம் . அதன்பிறகு பத்தாவது மாதத்தில் ஒரு அறுவடையும், 12 மாதத்தில் ஒருவரையும் செய்து அதன்பிறகு செடி வளரும் தன்மையை பொருத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறுவடையானது நடைபெறும். குறைந்தபட்சமாக ஜந்து வருடங்கள் வரை வளரும், இதன் இலையை மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது. அறுவடை செய்த மூன்று மணிநேரத்திற்குள் இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், வீணாகிவிடும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் பெருமளவு லாபம் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு ஏக்கருக்கு மேல் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும், முதன்முறை என்பதால் அரை ஏக்கரில் பயிரிட்டு தொடங்கியுள்ளேன். புதிய முயற்சியாக இதனை செய்ய தொடங்கி உள்ளோம், வெற்றி பெற்ற பிறகு இப்பகுதி மக்களுக்கு மல்லிகை போன்ற குடும்ப விவசாய தொழிலாக எழுமிச்சை புல்லானது மாறிவிடும்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Ramanathapuram