கோயம்புத்தூர் கொங்கு மண்டல பகுதிகளில் வற்றாத ஜீவநதிகள் எதுவும் இல்லாத நிலையில் நிலத்தடி நீர் மட்டுமே விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று நீர் பாசனம் விவசாயத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் மழைப்பொழிவு குறைந்ததால் நிலத்தடி நீர் படிப்படியாக குறைந்தது.
இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகளே அதிக அளவில் தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சில பகுதிகளில் ஆயிரம் அடிக்கு கீழே நிலத்தடி நீர் உள்ள நிலையில் விவசாய நிலங்கள் அதிக அளவில் மனை நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் கோவை வெள்ளானைப்பட்டி பகுதியில் ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறு எடுத்து மானாவாரி நிலத்தை நெல் விளையும் விவசாய நிலமாக மாற்றி இருக்கிறார் விவசாயி செல்வராஜ்.
விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் தொடர்ந்து மனை பிரிவுகளாக, கட்டிடங்களாக மாறி வரக்கூடிய தற்போதைய சூழலில் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் பயன்படுத்தி வந்த தூயமல்லி நெல் ரகத்தை பயிரிட்டு வெற்றியும் அடைந்திருக்கிறார் விவசாயி செல்வராஜ்.
இதுகுறித்து செல்வராஜ் கூறியதாவது, “வழக்கமாக பயிரிடும் சோளம், ராகி, கம்பு, கடலை பயிர்களை தவிர்த்து, நிலத்தில் சாதாரண உழவுக்கு பின், பூமியில் நீர் நிரப்பு நிலத்தை தயார் செய்துள்ளார். வழக்கமாக நெல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அடியுரம் மேலும் பூச்சிக்கொல்லி இவற்றை தவிர்த்து வேம்பு, நொச்சி, எருக்களை, ஊணங்குடி போன்றவற்றைப் பயன்படுத்தி மண்ணை பக்குவப்படுத்தியும் மீண்டும் சேற்று உழவுக்கு பின் நாற்றங்காலை அமைத்து நெற்செடிகளை உருவாக்கியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் வயலில் வரப்பு அமைத்து நாட்டு நடவு செய்து தற்போது 3 1/2 அடி உயரத்திற்கு நெற்கதிர்கள் வளர்ந்து நிற்கிறது. அடியுரம் மேலும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் களையெடுக்காமல் நெற்கதிர் நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி இருக்கும் இந்த சூழலுக்கு பாரம்பரிய தூயமல்லி ரகம் காரணம். நூற்றாண்டுகளுக்கு முன்னர் சேர சோழ பாண்டிய மன்னர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த நெல் ரகம் கொங்கு மண்டலத்தில் இயற்கை முறையில் வளர்ந்து நின்று தற்போது அறுவடைக்கு தயாராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” இவ்வாறு கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Coimbatore, Local News