முகப்பு /business /

கோடை நடவு அவசியமா..? தஞ்சை சித்தரின் கவனிக்க வைக்கும் கருத்து..!

கோடை நடவு அவசியமா..? தஞ்சை சித்தரின் கவனிக்க வைக்கும் கருத்து..!

X
மாதிரி

மாதிரி படம்

Summer Planting : கோடை நடவு அவசியமா? மண் வளம் காக்க விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன? தஞ்சை சித்தர் கூறுவதை கேளுங்கள். 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சித்தர் கோடையில் நடவு  செய்வது குறித்து விளக்குகிறார்.

பொதுவாக தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட டெல்டா மாவட்டத்தில் 2 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களையும் தாண்டி ஒரு சில மாவட்டங்களில் கிணறு வைத்திருப்பவர்களும், போர் வைத்திருப்பவர்களும் அந்த நீரை பயன்படுத்தி கோடை நடவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லிற்கு மண்வளம் எந்த அளவிற்கு முக்கியம் கோடையில் நடவு நடுவது அவசியமா? மண்வளத்தை காக்க விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன என்பதை தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் சித்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதை பின்வருமாறு காணலாம்.

தஞ்சை சித்தர்

பயிர் சுழற்சி 

இதுகுறித்து அவர் கூறுகையில், “பயிர் சுழற்சி என்பது மண் வளத்தை காக்கக்கூடிய முக்கியமான ஒன்று.உதாரணத்திற்கு 2 போகம் நெல் சாகுபடி செய்கிறோம் என்றால் அதை சார்ந்த இருவித்திலை தாவரமான உளுந்து சோயா போன்றவற்றை நிலத்தில் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும் இவ்வாறு செய்தால் மண் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை இதிலிருந்தே எடுத்துக் கொள்ளும் அதாவது இந்த சுழற்சி முறையில் இருந்தே.

நிலத்திற்கு ஏற்ற பயிர்

பொதுவாக ஒரு நிலத்தில் நிலத்திற்கு ஏற்ற பயிரை சாகுபடி செய்ய வேண்டும். நெல் என்பது தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் விளையக்கூடிய ஒரு பயிர்.தண்ணீர் அதிகம் தேங்கினாலும் தாங்கி கொள்ள கூடிய பயிரும் கூட இவற்றை கொண்டு வறண்ட நிலத்தில் கிணற்று நீர் இருக்கிறது என்ற காரணத்தினால் அங்கு நெல் சாகுபடி செய்தோம் என்றால் நெல் வளரும் ஆனால் மணிற்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த நெல்லாக இருக்குமா என்றால் இருக்காது.

இதையும் படிங்க : இனி விவசாய நிலங்களை விலங்குகள் சேதமாக்காது.. விழுப்புரம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..

அது தண்ணீர் தேங்க கூடிய பகுதிகளில் வளர்ந்தால் மட்டுமே அது சீராக, ஊட்டச்சத்து நிறைந்த நெல்லாக இருக்கும்.

கோடையில் நெல் தேவையில்லை

பொதுவாக ஆற்று நீர் பாசனம் திறந்து விடப்படும் அந்த காலகட்டத்தில் குருவை, சம்பா‌ தாளடியில் நெல் பலரால் பயிரிடப்பட்டு வருகிறது. இதைத் தாண்டி கோடையிலும் நெல் நட வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.தேவைக்கு அதிகமான நெல் அரசிடம் உள்ளது என புள்ளி விவரங்கள் சொல்கிறது‌.

எனவே கோடையில் ஆழ்துளை கிணறு மூலம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் வெளியே எடுத்து விட்டோம் என்றால் கூடிய விரைவில் உப்பு தண்ணீர் தான் வரும் என்பதில் துளி கூட ஆச்சரியம் இல்லை.

இதை அரசும் ஒரு ஆலோசனையாகவும் நெருக்கடி யாகவும் விவசாயிகளிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பிறகு கோடையில் என்ன செய்யலாம் என்றால் நெல் நடாமல் நிலத்தை தரிசு வைத்து ஆட்டு கிடாய் போடலாம். குளத்து, ஆற்று வண்டலை அடித்து அதன் பிறகு பல தானிய பயிரை ஒரு இரண்டு மூன்று காலம் செய்தோம் என்றால் மண்வளம் பெருகும் மண் அதற்கான சத்துகளையும்‌ அதிலிருந்து எடுத்துக் கொள்ளும் பெரிய அளவில் தண்ணீரும் தேவைப்படாது.

ஆனால் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கிக் கொண்டு உடனே பணம் தருவதால் விவசாயிகள் கோடையிலும் நெல்லை நடுகின்றனர். விவசாயிகளின் பார்வை ஒரு பக்கம் சரிதான். மற்ற பயிர்களையும் அதாவது உளுந்து போன்ற பல தானிய பயிர்களையும் அரசு இதுபோன்று நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கினால் விவசாயிகள் பயிர் சுழற்சி முறை என்பது மாறும் அதற்கு அரசு முன் வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இருந்தாலும் அதை விற்பனை செய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது அவற்றை மனதில் வைத்து விவசாயிகள் மாற்று வழியில் சுழற்சி முறையில் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்றார்.

First published:

Tags: Agriculture, Local News, Thanjavur