முகப்பு /business /

நெல்லையில் மண்வளத்தை காத்து மகசூலை பெருக்க அறிவுறுத்தல்..

நெல்லையில் மண்வளத்தை காத்து மகசூலை பெருக்க அறிவுறுத்தல்..

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai News : விவசாயிகள் மண்வளத்தை பாதுகாத்து வேளாண்மையில் அதிகமாக மகசூலை பெற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் மண்வளத்தை காத்து மகசூலை பெருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “வேளாண்மையில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை குறைத்து அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தை மீட்டு எடுப்பதுடன் நல்ல தரமான உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம்.

மேலும் அங்கக உரங்கள் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன் தரமான உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் அங்கக உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

அங்கக கழிவுகளான பயிர்க் கழிவுகள் வைக்கோல், பயிர் கட்டைகள், நிலக்கடலை தோல், நெல் உமி, சோளத்தட் டைகள், கம்பு தட்டைகள், மக்காச்சோள தட்டைகள், பல பயிர் கழிவுகள், கால்நடை கழிவுகள், வீட்டு காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மக்க வைப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1.9 கோடி டன் பயிர் கழிவுகள் மக்க வைத்து பயன்படுத்தப்பட்டு பயிர்களுக்கு அளிப்பதன் மூலம் லாபகரமான உற்பத்தியை அதிகரிக்கலாம். ஒரு டன் அங்கக கழிவை மக்க வைக்கஇரண்டு கிலோ நுண்ணுயிர் கூட்டுக் கலவையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த 2 கிலோ நுண்ணுயிர் கூட்டு கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கரைசலை குவித்து வைக்கப்பட்டுள்ள அங்கக கழிவுகளின் படுக்கைகளில் நன்றாக தெளித்து கிளறி விட வேண்டும்

top videos

    இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த நார்ச்சத்துள்ள கழிவுகள் 60 முதல் 75 நாட்களிலும் அதிக நார்ச்சத்துள்ள கழிவுகள் 10 முதல் 100 நாட்களிலும் மக்கும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தினை ஒரு ஹெக்டேருக்கு 5 டன் இட வேண்டும். இதனை பயிரிடுவதற்கு முன்பு அடியுரமாக நிலத்தில் அளிப்பதன் மூலம் மண்ணின் இயற்பியல் வேதியல் உயிரியல் பண்புகள் மேம்பட்டு ஊட்டச்சத்துகளை பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவும் இதன் மூலம் பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

    First published:

    Tags: Agriculture, Local News, Tirunelveli