முகப்பு /business /

கிளை வாய்க்கால்களை தூர்வார நிதி வேண்டும்.. தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..

கிளை வாய்க்கால்களை தூர்வார நிதி வேண்டும்.. தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..

X
மாதிரி

மாதிரி படம்

Delta Farmers : டெல்டா மாவட்டங்களில் கிளை வாய்க்கால்களை தூர்வார தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிளை வாய்க்கால்களை தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,065 கி.மீ தொலைவுக்கு தூர்வார 189 பணிகளுக்கு ரூ.20.45 கோடியும், திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் கி.மீ தொலைவுக்கு 111 பணிகளுக்கு ரூ.12.89 கோடியும், நாகை மாவட்டத்தில் 301 கி.மீ தொலைவுக்கு 28 பணிகளுக்கு ரூ.3.97 கோடியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 749 கி.மீ தொலைவுக்கு 51 பணிகளுக்கு ரூ.8 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிளை வாய்க்கால்களை தூர்வார நிதி வேண்டும்

இதனிடையே, ஆறுகள் ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதுபோல், கிளை வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வாரவும் முக்கியத்துவம் அளிப்பதுடன், இதற்காக சிறப்புநிதி ஒதுக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டி வழியாக பட்டுக்கோட்டை வரை செல்லும் கல்லனை கால்வாயின் கருப்பட்டிப்பட்டி பாச்சூர் அய்யம்பட்டி கிராமம் வழியாக செல்லும் உளவயல்கிளை வாய்க்காள் முழுவதும் நானல் செடிகள் வளர்ந்து பதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் நீர் சீராக செல்வதில்லை என இவற்றையும் அரசு கவனித்தில் கொண்டு சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Local News, Money18, Tanjore