முகப்பு /வணிகம் /

விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி? - வேளாண் நிபுணர் தரும் ஆலோசனை!

விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி? - வேளாண் நிபுணர் தரும் ஆலோசனை!

X
விவசாயிகள்

விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட வேண்டுமா? 

Tirunelveli Farmers | விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட வேண்டுமா? 

  • Last Updated :
  • Tirunelveli, India

வாட்ஸ்அப் , முகநூல் வாயிலாக காய்கறிகளை வியாபாரம் செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டுமாறு  வேளாண் துறையில் முன்னாள் துணை இயக்குனர் டேவிட் ராஜா பியூலா அறிவுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் நலனுக்காக கடந்த 35 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார் டேவிட் ராஜா பியூலா. இவர் வேளாண் துறையில் முன்னாள் துணை இயக்குனராக பணியாற்றியவர். தனது பணி ஓய்விற்கு பிறகும் விவசாயிகள் கடன் வாங்காமல் பயிர் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக அறிவுரை கூறி வருகிறார். மேலும், விவசாய நிலத்தில் உள்ள பூச்சிகளை அழிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் இவர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், பட்ஜெட் முறையில் தண்ணீரை எவ்வாறு பயிர்களுக்கு ஊற்றுவது தொடர்பாகவும் அவர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

டேவிட் தனது பணி ஓய்விற்கு பிறகு திருநெல்வேலி அருகே நிலங்களை வாங்கி பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த காய்கறிகளை வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வாயிலாக விற்பனை செய்து வருகிறார். இதுபோன்று மற்ற விவசாயிகளும் விற்பனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

டேவிட் ராஜா பியூலா

இது குறித்து அவர் கூறுகையில், “காய்கறிகள் விளைந்த பின்பு அதனை மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு கொடுப்பதால் குறைவான வருமானம் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. எனவே, வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வாயிலாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை மொத்தமாகவும் நேரடியாகவும் வாங்க தயாராக உள்ள மக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். பாதி காய்கறிகளை மொத்தமாகவும் மீதி காய்கறிகளை சில்லறை விற்பனைக்கும் கொடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் என்பதே வராது” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Money18, Tirunelveli