முகப்பு /business /

செங்கல்பட்டில் மரபு விதைகளை பாதுகாக்க ஒரு புதிய முயற்சி!

செங்கல்பட்டில் மரபு விதைகளை பாதுகாக்க ஒரு புதிய முயற்சி!

X
செங்கல்பட்டில்

செங்கல்பட்டில் மரபு விதைகளை பாதுகாக்க ஒரு புதிய முயற்சி

Chengalpattu News | மரபு விதைகளை பாதுகாக்கவும், அதை விவசாயிகளுக்கே கொடுத்து உற்பத்தி செய்ய ஊக்கமளிக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாய விதை வங்கி திறப்பு விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள மரபு விதைகளை பாதுகாக்கவும், அதை அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கே கொடுத்து உற்பத்தி செய்ய ஊக்கமளிக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாய விதை வங்கி திறப்பு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள மரபு ரகங்களான இலவம்பாடி முள் கத்திரிக்காய், குடியாத்தம் சார கத்திரி, சந்தன காந்தாரி, நாம பூசணி, ஆராஞ்சி சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளை உருட்டு வெண்டை, பலவித தக்காளி உள்ளிட்ட 450 க்கும் மேற்பட்ட விதைகள் இந்த விதை வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விதை வங்கியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சுற்றியுள்ள இளம் விவசாயிகள் மற்றும் மாடித்தோட்ட விவசாயிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் இலவசமாக விதைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள அனைத்து விதைகளும் மரபுவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதை வங்கியை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பிரியா ராஜ் நாராயணன் திறந்து வைத்தார்.

First published:

Tags: Chengalpattu, Local News