முகப்பு /வணிகம் /

கொய்யா சாகுபடியில் இந்த தொழில்நுட்பம் நல்ல லாபம் தரும்.. விழுப்புரம் தோட்டக்கலைத்துறை அதிகாரி சொல்லும் சூப்பர் தகவல்..

கொய்யா சாகுபடியில் இந்த தொழில்நுட்பம் நல்ல லாபம் தரும்.. விழுப்புரம் தோட்டக்கலைத்துறை அதிகாரி சொல்லும் சூப்பர் தகவல்..

X
கொய்யா

கொய்யா சாகுபடி

Guava Cultivation | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் சோழாம் பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயி பாஸ்கரன்(55), 25 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். எப்போதும் கரும்பு விவசாயம் செய்துவந்த பாஸ்கர் தற்போது மாற்று விவசாயமாக தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின்படி கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “4 ஏக்கர் பரப்பளவில் லக்னோ L49 மற்றும் லக்னோ L46 என்ற கொய்யா ரகத்தை பயிர் செய்துள்ளேன். இந்த ரகத்தில் ஒரு ஏக்கரில் 10 முதல் 12 வரை மகசூல் ஈட்ட முடியும். நல்ல மகசூல் ஈட்ட வேண்டும் என்றால் சில தொழில்நுட்பங்களை கொய்யா சாகுபடியில் பின்பற்ற வேண்டும்” என்றார்.

வளைத்து விடுதல் (Bending)

இதேபோல், கொய்யா சாகுபடியில் உள்ள சில தொழில்நுட்பங்களை விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டாரத்தை சேர்ந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் கொய்யா சாகுபடியில் லாபம் பார்ப்பது பற்றிய தொழில்நுட்பத்தை கூறியதாவது, “வயது மிகுந்த மரங்களில், மரமானது ஓரளவு உயரத்தை எட்டியவுடன் நேராக வளர்ந்து விடும். அவ்வாறு நேராக வளரும் மரங்கள் பக்கவாட்டு கிளைகளை அதிகமாக உருவாக்காமல் இருப்பதால் மகசூலின் அளவு குறையும்.

அவ்வாறு நேராக மேல் நோக்கி செல்லும் கிளைகளை நன்றாக மடக்கி, அதன் மேல் பகுதியை நிலத்துக்கு இணையாக இழுத்துக் கட்டுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். அல்லது ஒரு குச்சியில் நுனிக்கிளைகளைக் கட்டி நிலத்தை நோக்கி இழுத்து கட்ட வேண்டும். இப்படி செய்வதால் உறக்க நிலையில் உள்ள மொட்டுக்கள் நன்கு துளிர் விட்டு அதிக மகசூலை தரும்.

இதையும் படிங்க : நாளை முழு அடைப்பு : பேருந்துகளுக்கு கட்டுப்பாடு... எங்கு தெரியுமா?

* கொய்யா சீசன் முடிந்தவுடன் முதலில் இலைகளை அகற்ற வேண்டும்.

* 15 நாட்களுக்கு பிறகு தேவையில்லாத மற்ற கிளைகளை வெட்ட வேண்டும்.

* கொய்யா மரங்களை வளைத்து கட்டுவதன் மூலம் புதிய தளிர்கள் உருவாகும்.

* கொய்யா செடிகளை வளைத்து கட்டுவதன் மூலம் பூ மற்றும் காய்கள் புதிதாக உருவாகும்.

* கொய்யா மரத்திற்கும் 6 முதல் ஏழு கிளைகளை ஒன்று சேர்த்து கட்ட வேண்டும்

* கட்டிய பிறகு உள்ள இடைவெளியில் காற்றோட்டமாகவும் மருந்து தெளிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

* செடிகளை தாங்குவதற்கு பிளாஸ்டிக் பைகளில் மண்ணை நிரப்பி தொங்கவிடலாம் (குறைந்த செலவு).

* செடிகளை வளைத்து கம்பிகள் கொண்டு காட்டிவிடலாம். (அதிக செலவு அதிக ஆட்கள் தேவை).

செடிகளை வளர்த்து கட்டாமல் விட்டு விட்டால் கொய்யா சாகுபடி நல்ல லாபமும் நல்ல மகசூல் பார்க்க முடியாது.

* அதிக ஏக்கரில் பயிர் சேர்ப்பவர்கள் நிச்சயமாக வளர்த்து கட்டுதல் முறையை பின்பற்ற வேண்டும்.

மேலும், ஏக்கரில் உள்ள செடிகளை வளர்த்து கட்டாமல் ஒரு பாதி முதலில் செய்து லாபம் பார்த்த பிறகு அடுத்த பாதியில் கை வைக்க வேண்டும். இப்படி செய்தால், சீசன் இல்லாத நேரத்திலும் கொய்யா சாகுபடியில் லாபம் பார்க்கலாம். மேலும் வளைத்து கட்டுதல் மூலம் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தலாம். அதுபோல குட்டை ரகமான தவான் பிங்க், அவர்க்கு கிரன் கொய்யா ரகத்தில் செடிகளை கவாத்து செய்யும் தொழில்நுட்பத்தை பின்பற்றினால் இந்த ரக செடிகளில் லாபம் பார்க்க முடியும்.

எனவே, கொய்யா சாகுபடியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளும் வளைத்து கட்டுதல் மற்றும் கவாத்து முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நல்ல மகசூல் எடுத்து நல்ல வருமானத்தை பார்க்க முடியும்" என தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறினார்.

First published:

Tags: Agriculture, Local News, Villupuram