விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் வெள்ளை பொன்னி நெல்லை சாகுபடி செய்து வருகின்றனர். தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால், நல்ல விளைச்சலும் நல்ல லாபமும் பார்க்கலாம் என இயற்கை விவசாயி பாண்டியன் நம்மிடம் பகிர்ந்தார்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், அரிசி உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். எனவே ஓரளவுக்கு நீர் வளம் இருக்கும் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் வெள்ளை ரகப் பொன்னி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் மற்றும் லாபம் தரக்கூடிய வெள்ளை நிற பொன்னி பயிர் செய்தால் மடிந்து விடுகிறது என்பதால் சில விவசாயிகள் இதனை பயிர் செய்ய யோசிக்கிறார்கள்.
ஆனால் குறைந்த செலவில் அதிக விளைச்சலை தரக்கூடிய ரகம் தான் பொன்னி. தங்கத்திற்கு இணையாகவும் பொன்னி ரக நெல் கருதப்படுகிறது. இதில் இரண்டு முறைகளைக் கொண்டு பயிர் செய்தால் நிச்சயமாக லாபம் பார்க்க முடியும்.
இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..
முதல் முறை :
இந்த பயிருக்கு, இயற்கை முறையில் பசுந்தாள் உரம் முதலில் போடப்படுகிறது. நடவு நட்ட பிறகு கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு சாம்பல் கொண்டு பராமரிக்கப்படுகிறது. இதுவே போதுமானதாகும். இப்படி பயிர் செய்யும்போது நல்ல விளைச்சல், நல்ல மகசூல் கிடைக்கும். இந்த முறையை பயன்படுத்தி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 14 மூட்டை வரை நெற்பயிர்களை அறுவடை செய்யலாம்.
இரண்டாவது முறை :
வரப்பு உயர நெல் உயரும் என்பதற்கு ஏற்றார் போல, வெறும் தண்ணீரை மட்டும் கொண்டு சாகுபடி செய்யலாம். அதாவது நெற்பயிருக்கு எந்த ஒரு அங்கக இடுப்பொருட்களையும் கொடுக்காமல், நெற்பயிர்கள் மணி பிடித்து சாயும் வரை வெறும் தண்ணீரை மட்டும் பாய்ச்சி அறுவடை செய்வது. முதல் முறையைக் காட்டிலும் இந்த முறையில் அதிக விலைச்சலும் அதிகமாக சொல்லும் ஈட்ட முடியும்.
நான் என்னுடைய இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் அங்கக இடு பொருட்களை பயன்படுத்தியும், மற்ற மீதமுள்ள இடத்தில் வெறும் தண்ணீரை பாய்ச்சியும் சாகுபடி செய்து வருகிறேன். பொன்னி நெல் சம்பா பட்டத்திற்கு ஏற்றது. புரட்டாசி மாதத்தில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஏக்கருக்கு, 20 அல்லது 30 மூட்டைகள் வரை மகசூல் ஈட்ட முடியும்.
விவசாயிகள் உர தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும், அல்லது குறைந்த செலவில் நல்ல வருமான பார்க்க வேண்டும் என்றாலும், பொன்னி ரகத்தை இந்த இரண்டு முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் நல்ல விளைச்சலை எடுத்து நல்லா லாபம் பார்க்கலாம். ஒரு மூட்டை பொன்னி 1800 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போகிறது. குறைந்தபட்சம் இரண்டு ஏக்கரில் இருந்து நெல் பராமரிப்பு, செலவுகள் போக ஒரு லட்சம் வரை லாபம் பார்க்க முடியும் என்கிறார் விவசாயி பாண்டியன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Villupuram