முகப்பு /வணிகம் /

வீட்டு மாடி தோட்டம் அமைக்க ஆசையா? எளிதான வழி இதோ!

வீட்டு மாடி தோட்டம் அமைக்க ஆசையா? எளிதான வழி இதோ!

X
மாடி

மாடி தோட்டம்

Terrace garden | மாடி தோட்டம் அமைக்க ஆசை இருப்பவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து கிட் வாங்கி விவசாயத்தை தொடங்கலாம்.

  • Last Updated :
  • Madurai, India

தமிழக அரசால் மானிய விலையில் தரக்கூடிய மாடி தோட்டத்திற்கான கிட் எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த காலத்தில் வீட்டிலேயே தோட்டம், கிணறு ஆகியவை இருந்ததால் அவர்களுக்கு தேவையான சின்ன சின்ன காய்கறி வகைகளை தோட்டத்தில் பயிரிட்டு பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இப்ப இருக்கின்ற மாடர்ன் உலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இல்லாத காரணத்தினால் வீட்டு மாடியில் மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மாடித்தோட்டம் எண்ணிக்கையை அதிகரிக்க மாடி தோட்டத்திற்கு தேவையான பொருட்களை மானிய விலையில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது நம்ம வீட்லயும் மாடித்தோட்டம் அமைக்கணும் என்று நீங்கள் நினைத்தால் மானிய விலையில் மாடித்தோட்டத்திற்கு தேவையான பொருட்களை எப்படி வாங்கலாம் என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். மாடி தோட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால் உங்கள் ஏரியாவில் அருகில் இருக்கக்கூடிய தோட்டகலைத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் கார்டை கொடுத்தால் அங்கு உள்ள அதிகாரிகள் , மாடி தோட்டம் அமைக்க நமக்கு தேவைவையானவற்றை கேட்டு பெறும் வகையில், ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுப்பார்கள் .

அதைப்பூர்த்தி செய்து விட்டு கொடுத்தால், இரண்டு நாட்களுக்குள் தொலைபேசியில் அழைக்கின்றோம் அப்பொழுது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் அப்பொழுது சென்று நாம் வாங்கிக் கொள்ளலாம். இது போக ஆன்லைன் மூலமாகவும் இந்த கிட்டை வாங்கிக் கொள்ளலாம்.

எவ்வாறு என்றால் google சென்று tnhorticulture.tn.gov.in என்று சர்ச் செய்து மாடித்தோட்டம் கிட் வெப்சைட்டை கிளிக் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் மாடித் தோட்டத்திற்கான பேஜ் ஓபன் ஆகும். அதில் விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும் அப்பொழுது மாடி தோட்டத்திற்கான ஃபார்ம் ஒன்று ஓபன் ஆகும். அந்த ஃபார்மில் தங்கள் பெயர் , ஆதார் எண், அப்பா பெயர், மாவட்டம் , அட்ரஸ், போன் நம்பர் போன்றவற்றை பில் செய்து பிறகு கீழே சென்றால் மாடித்தோட்டம் தொகுப்பு என்ற ஒரு பகுதி இருக்கும் அதில் நமக்கு எத்தனை கிட் வேண்டும் என்பதை செலக்ட் செய்ய வேண்டும் இதே மாதிரி பல செடி தொகுப்பு ஒன்று இருக்கும் அது வேண்டுமென்றால் அதையும் செலக்ட் செய்து கொள்ளலாம் இந்த தொகுப்பில் என்னென்ன இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள பொருள் அறிக என்ற ஆப்ஷன் இருக்கும்.

அதனை கிளிக் செய்தால் மாடித்தோட்டம் பல செடி தொகுப்பில் என்னென்ன இருக்கின்றது என்பது பற்றிய முழு விவரம் வரும் இதுபோக இந்தத் தொகுப்பின் விலையை அறிய வேண்டும் என்றால் விலை அறிக என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்தால் விலையின் முழு விவரம் வரும். ஒன்பதாயிரம் மதிப்புமிக்க மாடித்தோட்ட கிட்ட மானிய விலையில் தமிழக அரசால் 450 ரூபாய்க்கு கொடுக்கப்படுகின்றது.

இதனைப் பார்த்துவிட்டு அப்படியே கீழே சென்றால் நம்முடைய புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு டீடைல் கேட்கும் அதனையும் பில் செய்து விட்டு சமிட் கொடுத்தால் நமக்கு எஸ்எம்எஸ் இல் பதிவு எண் வரும் தோட்டக்கலைத் துறையில் இருந்து நாம் பில் செய்த விண்ணப்பத்தை அப்ரூவ்ட் செய்தால் இந்தப் பதிவு எண்ணை வைத்துக்கொண்டு மாடித்தோட்டம் கிட்டை தோட்டக்கலை துறை அலுவலகம் சென்று நேரில் போய் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறாக மாடி தோட்டத்திற்கான கிட்டை பயன்படுத்திக் கொண்டு இயற்கையான முறையில் ஒவ்வொரு வீட்டிலும் மாடித்தோட்டம் அமைத்துக் கொள்ளலாம்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Madurai, Terrace Garden