முகப்பு /business /

கத்திரி சாகுபடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? - விழுப்புரம் விவசாயி விளக்கம்..!

கத்திரி சாகுபடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? - விழுப்புரம் விவசாயி விளக்கம்..!

X
கத்திரி

கத்திரி சாகுபடி

Eggplant cultivation | கத்திரியில் சேதம் விளைவிக்கும் பூச்சிகளைத் தடுத்து, உரிய லாபத்தை ஈட்டுவது பற்றிய பல அறிவுரைகளை வழங்குகிறார் விழுப்புரம் விவசாயி பாண்டியன்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கத்தி சாகுபடி பற்றி விளக்குகிறார்.

முக்கிய காய்கறி பயிர்

தமிழகத்தில் கத்திரி ஒரு முக்கிய காய்கறிப்பயிராகும். இது அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் காயாகும். பழுக்காத கத்திரி காயை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். கத்திரியில் முக்கிய சத்துப்பொருட்களான வைட்டமின் ஏ மற்றும் பி இருக்கின்றன. கத்திரி நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்தாகவும் பயன் படுத்தப்படுகின்றது. இந்தியாவில் 5 லட்சம் ஹெக்டரில் இதனை பயிரிடுகின்றனர். இதன் மகசூல் ஹெக்டருக்கு 16 டன் ஆகும்.

இந்நிலையில், கத்திரியில் சேதம் விளைவிக்கும் பூச்சிகளைத் தடுத்து, உரிய லாபத்தை ஈட்டுவது பற்றிய பல அறிவுரைகளை வழங்குகிறார் விழுப்புரம் விவசாயி பாண்டியன். இவர், இயற்கை முறையில் காய்கறி பயிரிடுவது பற்றிய பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை மற்ற விவசாயிகளுக்கு எடுத்து வருகிறார். இவர் 11 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.  இவர், தோட்டக்கலை பயிர் செய்து பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து வருகிறார்.

கத்திரி சாகுபடி

பல்வேறு பூச்சி தாக்குதல்

இதுகுறித்து அவர் கூறுகையில், “கத்திரி செடியை பல்வேறு வகையான பூச்சி தாக்குதல் இருக்கின்றன. அதில் குறிப்பாக மா பூச்சி பொரிவண்டு பூச்சி தாக்குதல், மஞ்சள் பூச்சி, தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டும். இந்த பூச்சி இளம் பயிரைத் தாக்குவதால் நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் கத்தரி செடிகளின் குருத்து இலைகள் வாடி, காய்ந்து தொங்கி விடும்.

இதையும் படிங்க : தேனியில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பில் மகுடம் சூட்டிய பெண் தொழில் முனைவோர்!

இந்த செடிகளின் தண்டுகளை கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப்புழு காணப்படும். இப்புழுவானது காய்கள் வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சேதப்படுத்துகிறது. இதனால் காய்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். எனவே, இத்தகைய நோய் தாக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினை கிள்ளி எறிந்து விடவேண்டும். மாவு பூச்சி, மஞ்சள் பூச்சி, தாக்குதல் ஏற்பட்டால் இலைகள் சோர்ந்து காணப்படும். உடனடியாக அந்த இலைகளை கிள்ளி எரிந்து விட வேண்டும்.

இதை பண்ணுங்க

இவ்வாறு, மாவு பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் இலைகள் சோர்ந்து மட்டும்தான் காணப்படும். ஆனால், மஞ்சள் பூச்சி தாக்குதல் இருந்தால் இலைகள் முழுவதும் அரித்துவிடும். முதலில் பத்து செடியில் அடுத்து 10 செடிகள் என்ன செடி முழுவதும் அரித்துவிடும். பொறிவண்டு பூச்சி தாக்குதல் மாலை நேரத்தில் காணப்படும். கத்திரி செடிகளில் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருப்பதற்கு நாற்று விடும்போதே வேப்பம் புண்ணாக்கு சேர்த்து நாற்று விட வேண்டும்.

கத்திரி செடிகளை தவிர்த்து மற்ற செடிகள் இல்லாமல் (களைகள் இல்லாமல்) பார்த்துக் கொள்ள வேண்டும். கத்திரி செடியில் எருவு மட்டுமே போடாமல், எருவும் பிளஸ் வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு வேப்ப எண்ணெய் வேப்பம் புண்ணாக்கு கண்டிப்பாக செடிகளுக்கு தர வேண்டும். மழைக்காலங்களில் மழை நீரை சேமித்து கத்திரி செடிகளில் அடித்து வந்தால் கத்திரி செடியில் நல்ல காய்களில் காய்க்கும்.

இயற்கை முறையை பயன்படுத்துங்க

வேப்ப எண்ணெய் கத்திரி செடியில் பயன்படுத்தும் போது செடிகளுக்கு ஏற்றவாறு அளவு முறைகளை பின்பற்றி செடிகளின் மீது தெளிக்க வேண்டும். புளித்தமோர் கரைசலை பயன்படுத்தினால் பூச்சி தாக்குதல் குறைந்து நல்ல மகசூல் காணலாம். இயற்கை முறையில் கிடைக்கும் இடுபொருட்களை பயன்படுத்தினால் நிச்சயமாக கத்திரிச் செடியை பூச்சி தாக்குதல் குறைத்து நல்ல மகசூல் ஈட்ட முடியும்” என இயற்கை விவசாயி பாண்டியன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் தன்னுடைய விராட்டி குப்பம் பகுதியில் உள்ள நிலத்தை விவசாயிகள் கண்டு பயன் பெறலாம் எனவும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 7811897510 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள், சாகுபடி முறைகளைக் பற்றி தெரிந்து கொள்ளலாம் என பாண்டியன் தெரிவித்தார்.

    First published:

    Tags: Agriculture, Local News, Villupuram