முகப்பு /வணிகம் /

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன் பெறுவது எப்படி? 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன் பெறுவது எப்படி? 

X
மாதிரி

மாதிரி படம்

Government schemes | கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன் பெறுவது குறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மா. பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள் உழுவை இயந்திரங்கள் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை முன் பதிவு செய்து மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2023-24 நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு 98 பஞ்சாயத்துகளில் உள்ள . விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள் உழுவை எந்திரங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், தார்பாய்கள், கைத்தெளிப்பான்கள்,உயிர் உரங்கள், பண்ணை கருவிகள், சாகுபடிக்கான சான்று பெற்ற விதைகள், நுண்ணூட்ட உரம், மற்றும் வேளாண் இடுபொருட்கள் ஆகியவை வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும், 98 பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக பயனாளிகள் தேர்வு மற்றும் உழவன் செயலி வாயிலாக முன்பதிவு ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிமை விவரம்,( பட்டா ,சிட்டா) ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற விவரங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் உழவன் செயலி வாயிலாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே இடுபொருட்கள் வழங்கப்படும். மேலும் பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வரிசையின் அடிப்படையிலேயே வழங்கப்படும். என்றும் ,எனவே விவசாயிகள் அனைவரும் பதிவு செய்து மானியத்தில் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Govt Scheme, Local News, Money18, Pudukkottai