முகப்பு /business /

விவசாயத்திற்கு நீர் தேவை எவ்வளவு முக்கியம் - தஞ்சை சித்தரின் சிந்திக்க வைக்கும் தகவல்கள்.. 

விவசாயத்திற்கு நீர் தேவை எவ்வளவு முக்கியம் - தஞ்சை சித்தரின் சிந்திக்க வைக்கும் தகவல்கள்.. 

X
விவசாயத்தில்

விவசாயத்தில் தண்ணீர் தேவை

Organic Farming : தஞ்சாவூரை சேர்ந்த இயற்கை விவசாயி சித்தர் கூறிய விவசாயம் பற்றிய முழுமையாக தகவல்கள்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் கோ.சித்தர் கூறிய விவசாயம் பற்றிய முழுமையாக தகவல்களை இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த தாவரமாக இருந்தாலும் பயிராக இருந்தாலும் சரி மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அதை தான் மண்ணும் ஆசைப்படுகிறது. தினமும் உழவன் வயலில் வரப்புகளை சுற்றி வராவிடில் அந்த நிலத்தில் பயிர் முறையாக வளராது. ஆனால் பயிருக்கு தண்ணீர் எவ்வளவு தேவை என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு காடுகளில் பல்வேறு வகையான மரங்கள் பூவரசு தேக்கு தென்னை முக்கிய பனை மரம் இது போன்ற பல மரங்கள் மழை பெய்யும் போது கிடைக்கும் மழைநீரை நிலத்திற்கு அடியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது பயண்படுத்திக்கொள்கிறுது.. ஆனால் தற்போது இருக்கும் நிலத்தில் ஒரிரு நாள் நீர் பாய்சாமல் விட்டால் அந்த இடமே வெடித்து வரண்டு காண்ப்படுகிறுது..இதற்கு என்ன காரணம் என்றால் ரசாயனம் உரங்களே மண் வளம் இல்லாததன் காரணமாகவே இப்படி விவசாயம் மாறிவிட்டது.

இயற்கை விவசாயம் செய்து வரும் கோ.சித்தர்

ஆனால் இயற்கை விவசாயத்தில் அது போன்று இல்லை.. இயற்கையாக மண் வளமும் காத்து பயிரயும் வளர விடும்.. இதை புரிந்து கொள்ளாமல் தண்ணீருக்கு அண்டை மாநிலங்களோடு சண்டை போடுகிறோம். எனவே செயற்கை விவசாய காட்டில் வளரும் ஒரு பயிர் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு இயற்கை விவசாய காட்டில் எடுத்துக் கொள்ளும் நீரை விட அதிகம்.

ஒரு மனிதன் ஒரு நாளில் கனிகளையும் காய்களையும் தானிய பயிர்களையும் உண்டு வாழ்ந்தால் அவன் அன்று அதிக அளவில் தண்ணீர் குடிக்க மாட்டான் அதற்கான நீர்ச்சத்து எல்லாம் அவன் உண்ட உணவிலேயே இருக்கிறது. இதை விட்டுவிட்டு பிரியாணி, சிக்கன் ரைஸ் போன்ற உணவுகளை உண்ணும் போது தண்ணீர் அதிகம் குடிக்கிறான் அதே போல் தான் நிலமும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் அமிர்த கரைசலோ, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு உரங்களை தெளிக்கும்போது மண்வளம் பெருகுவதோடு மட்டுமல்லாமல் குறைந்த அளவு தண்ணீர் கொடுத்தாலே அந்தமான் சேமித்து வைத்துக் கொள்ளும் நுண்ணுயிர் பெருக்கமும் அதிகரிக்கும். ஆனால் ரசாயன பொருட்களைக் கொண்டு கொட்டும்போது, உப்பால் அந்த நிலம் நிறைந்து காணப்படுகிறது மண்ணில் உப்பு சேர சேர தண்ணீருக்கு அதிகம் ஏங்குகிறது” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Local News, Thanjavur