முகப்பு /business /

நெற்பயிரில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?  புதுச்சேரி வேளாண் அலுவலர் விளக்கம்..

நெற்பயிரில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?  புதுச்சேரி வேளாண் அலுவலர் விளக்கம்..

X
நெற்பயிரில்

நெற்பயிரில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? 

Puducherry News | வேளாண்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெல்லில் தண்டு பூச்சி தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பகுதியில் தற்போது அதிகமாக நெல் பயிர் நடவு வேலை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நெற்பயிரில் அதிக அளவில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் நடைபெறுவதால் குருத்து அழுகும் அபாயம் உள்ளது. இதனால் நெல்லில் லாபம் பார்க்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். இதை கருத்தில் கொண்டு ஆத்மா திட்டத்தின் வாயிலாக தண்டு துளைப்பான் பூச்சியை இனக்கவர்ச்சி பொறி மூலம் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அலுவலர் தினகரன் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

இந்த செயல்விளக்கத்தின் ஏற்பாடுகளை விவசாயி சுப்பிரமணியன் மற்றும் அலுவலக ஊழியர் தம்பு சாமி ஆகியோர் செய்திருந்தனர். மேலும் தொழில்நுட்ப மேலாளர் மருத்துவர் செல்வமுத்து  அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் தலா 4 இனக்கவர்ச்சி பொறி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

First published:

Tags: Agriculture, Local News, Puducherry